குள்ள காட்டுப் பன்றி
This article has no links to other Wikipedia articles. (ஏப்ரல் 2019) |
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
அழிவின் விளிம்பிலுள்ள குள்ளத் தோற்றம் கொண்ட ஒரு காட்டுப் பன்றியே (Pygmy hog) “பிக்மி” என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகின்றது. பன்றிகளின் குடும்பத்தில், மிகச் சிறிய அங்கத்தவர் இந்தப் பிக்மி காட்டுப் பன்றியேதான்! ஒரு காலத்தில் இமயமலை அடிவாரப் பிரதேசங்கள், உத்தர பிரதேசம்தொடக்கம் அஸாம் மாநிலம் வரையிலான பிரதேசங்கள், நேபாளத்தின் ரெறாய் பிரதேசம் , பெங்கால் என்று பரந்து வாழ்ந்த இந்த இனம் அறுபதுகளில் அழியும் நிலையைத் தொட்டு விட்டது. ஆனால் 1971இல் இந்தியாவின் பார்னாடி வனவிலங்குகள் காப்பகத்தில் காணாமல் போய்விட்ட இந்தக் காட்டு விலங்குகள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டன. அனால் இவை இங்கு அதிகரிப்பதாகத் தெரியவில்லை என்கிறார்கள். 200ககும் குறைவான பன்றிகளே இப்பொழுது இருப்பதாகவும், இது 90களின் நடுப் பகுதிகளில் இருந்த தொகையை விட பாதித் தொகை என்றும் கூறப்படுகின்றது. ஆனால் அஸாம் மாநிலத்திலுள்ள புலிகளின் காப்பகமொன்றின் நிலைமை நம்பிக்கையளிக்கின்றது. 25செ.மீற்றர் உயரமான இந்தச் சிறிய காட்டு மிருகத்தை அழிவிலிருந்து காப்பாற்ற, கடந்த இரண்டு தசாப்த காலம் எடுத்த முயற்சி இங்கு வீண்போகவில்லை என்கிறார்கள். சமீபத்தில் இந்த வனவிலங்கு காப்பகத்தில் அடைத்து வளர்க்கப்படும் 110வது பிக்மி பன்றி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தன் மனையை தானே கட்டும்[1][2][3]
ஒரு “கூரையோடு” தன் வீட்டைத் தானே கட்டும் சில அரிய முலையூட்டிகள் வரிசையில் இந்தக் குள்ளப் பன்றியும் இணைந்து கொள்கின்றது. உயர்ந்த புற்களைக் கொண்ட ஈரப் புல் வெளிகள் அழிக்கப்படுவதால், இவையும் அழிக்கப்படுகின்றன என்று நம்பப்படுகின்றது.
12 கிலோ தாண்டாத எடை
இது எழுந்து நிற்கும்போது உயரம் 20-30 .மீட்டர் மாத்திரமே இருக்கும் இதன் நீளம் 55-71செ.மீ. இதன் வாலின் நீளம் சுமாராக 2.5செ.மீ. ஒரு மிருகத்தின் எடை 6.6 கிலோவிலிருந்து 11.8 கிலோவிற்குள்ளேயே இருப்பதுண்டு. இதனுடைய தோல்நிறம் மரநிறமும், கறுப்பும் கலந்ததாக இருப்பதோடு, தோலின் மீதுள்ள உரோமம் கருமையாக இருக்கும். குட்டிகள் பிறக்கும்போது சாம்பர் நிறத்துடன் கலந்த ரோஜா வர்ணத்தில் இருக்கும். . நாளடைவில் இந்த நிறம் மரநிறமாக மாற, இதன் உடலின் மஞ்சள் வரிகள் தோன்ற ஆரம்பிக்கும். வளர்ந்த ஆண் பன்றிகளின் இரு பக்க வாயோரங்களில் பற்கள் துருத்திக் கொண்டிருக்கும். எட்டு வருடங்கள் வாழக்கூடிய இவை, ஓரிரு வருடங்களில் பாலுறவுக்குத் தயாராகி விடுகின்றன. மொன்சூன் பருவ கால மாற்றத்தி்றகு முன்னர் இவை குட்டிகள் ஈனுகின்றன. இதன் சூல்கொள் காலம் 100 நாட்கள். மூன்று தொடக்கம் ஆறு குட்டிகள் வரை ஈனும். தரையில் ஒரு பள்ளத்தைத் தோண்டி, அதை இலைகுழைகளால் நிரப்பி தனக்கென இது ஒரு இருப்பிடத்தை ஏற்படுத்திக் கொள்ளும். மரங்களின் வேர்கள், பூச்சிகள், எலிகள், சிறிய முலையூட்டிகள்- இவற்றின் சில உணவுகள்.
இனப்பெருக்கலில் சறுக்கலும் வெற்றியும்..
19ஆம் நுாற்றாண்டில் இலண்டன் , பேர்லின் மிருகக் காட்சிசாலைகளில் இந்தக் குள்ளப் பன்றியை பார்வையாளர்கள் பார்த்து ரசிக்க விட்டுள்ளார்கள். இந்த இனத்தை வளர்க்கும் நோ்ககில் இவர்கள் அடைத்து வைக்காத காரணத்தால், எல்லாமே விரைவில் அழிந்து போய்விட்டன. 1976தொடக்கம் 1978வரை சூரிச் மிருகக்காட்சிசாலையும் இதே வேலையைச் செய்தது. இங்கே இருந்த பெண் பன்றிகள் எல்லாம் இறந்து போயின. இதன் பின்னர் ஆங்கிலேய அமைப்பொன்றின் அரு முயற்சியால் இந்த மிருகங்களை அடைத்து வைத்து இனப்பெருக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளார்கள்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Grubb, P. (2005). "Species Porcula salvania". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. p. 641. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0. இணையக் கணினி நூலக மைய எண் 62265494.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - ↑ Meijaard, E.; Narayan, G.; Deka, P. (2019). "Porcula salvania". IUCN Red List of Threatened Species 2019: e.T21172A44139115. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T21172A44139115.en. https://www.iucnredlist.org/species/21172/44139115. பார்த்த நாள்: 16 January 2022.
- ↑ Chakravorty, P.; Sanyal, S. (2017). "Conservation of the Pygmy Hog in India". In Pratihar, S.; Clark, Jr. H.O. (eds.). Defaunation and Conservation. Tucson, Arizona: Herpetological Society, Tucson. pp. 95–104. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-85248-79-5.