குல் பர்தன்
குல் பர்தன் GulBardhan | |
---|---|
பிறப்பு | 1928 |
இறப்பு | 29 நவம்பர் 2010 | (அகவை 81–82)
தேசியம் | இந்தியர் |
பணி | நடனப் பயிற்றுநர் |
விருதுகள் | பத்மசிறீ (2010) |
குல் பர்தன் (GulBardhan) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த போபால் நகரத்தை மையமாகக் கொண்ட ஒரு நடன இயக்குனரும் நாடகக் கலைஞரும் ஆவார். 1928 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு நவம்பர் 20 வரையுள்ள காலத்தில் இவர் வாழ்ந்துள்ளார். இந்திய மக்கள் நாடக சங்கத்துடன் குல் பர்தன் தொடர்புடையவராக இருந்தார். 1952 ஆம் ஆண்டு பம்பாயில் கணவர் தலைமையேற்றுத் தொடங்கிய லிட்டில் பாலே என்ற நடனம் மற்றும் பொமலாட்டக் குழுவின் இணை நிறுவனராக குல் இருந்தார்.[1] 1954 ஆம் ஆண்டு கணவர் இறந்தபின்னர் குல் தானே லிட்டில் பாலே நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.[1][2]இந்த குழு பின்னர் ரங்கா சிறீ லிட்டில் பாலே குழு என மறுபெயரிடப்பட்டது. பல்வேறு நாடுகளில் இக்குழுதனது நிகழ்ச்சிகளை நடத்தியது.[3] 2010 ஆம் ஆண்டு இந்தியாவில் வழங்கப்படும் நான்காவது மிக உயரிய குடிமை விருதான பத்மசிறீ விருது, சங்கீத நாடக அகாடமி விருது உள்ளிட்ட பல விருதுகளை குல் பர்தன் பெற்றுள்ளார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Nair, Shashidharan (10 December 2010). "To Guldi with love". The Hindu இம் மூலத்தில் இருந்து 16 பிப்ரவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130216051050/http://www.hindu.com/fr/2010/12/10/stories/2010121050090200.htm.
- ↑ Ramanath, Renu (21 May 2011). "A dazzling piece preserved from the past". Narthaki. பார்க்கப்பட்ட நாள் 31 January 2013.
- ↑ Chkrvorty, Runa (2007). "An affair with dance". Harmony India. Archived from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 31 January 2013.
- ↑ "Press note" (PDF). Ministry of Home Affairs, Government of India. 25 January 2010. Archived from the original (PDF) on 3 February 2013. பார்க்கப்பட்ட நாள் 31 January 2013.