குலோத்துங்க சோழன் உலா உரை
Appearance
குலோத்துங்க சோழன் உலா உரை 16 ஆம் நூற்றாண்டில் தோன்றிய உரைநூல். பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஒட்டக்கூத்தரால் மூவருலா எழுதப்பட்டது.
விக்கிரம சோழன், அவன் மகன் இரண்டாம் குலோத்துங்கள், அவன் மகன் இரண்டாம் இராசராசன் ஆகிய மூவர் மீது பாடப்பட்ட மூன்று உலா நூல்களைக் கொண்டது இந்த மூவருலா.
இந்த மூன்றில் இடையிலுள்ள குலோத்துங்க சோழன் உலாவுக்கு மட்டும் நான்கு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் எழுதப்பட்ட உரை நூல் இது. இதனை எழுதியவர் இன்னார் என அறியமுடியவில்லை.
இந்த உரை உ. வே. சாமிநாதையர் அவர்களுக்குக் கிடைத்து அவரது மகனால் 1946 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டுள்ளது.
- இவரது உரையில் தொல்காப்பியம், பரிபாடல், பெருங்கதை, முதலான நூல்களிலிருந்து எடுத்துக்காட்டுகள் தரப்பட்டுள்ளன.
- சோர்ச்சி, இட்டவாகு, ஈழத்துப்பிடாரி முதலான வழக்குச் சொற்கள் வருகின்றன.
- கார் மேகம் கண்டு ஆடாத மயில் போலவும், கதிரவனைக் கண்டு மலராத தாமரை போலவும் இருப்பவள் பேதை – என்பது பட இவர் பேதைப் பருவத்துக்குத் தரும் உவமை விளக்கம் நன்றாக உள்ளது.
கருவிநூல்
[தொகு]- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, பதிப்பு 2005