குலாம் மொய்னுதீன் கான்ஜி
குலாம் மொய்னுதீன் கான்ஜி | |||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
நவாப், கான் | |||||||||||||||||||||||||||
1940களில் குலாம் மொய்னுதீன் கான்ஜிs. | |||||||||||||||||||||||||||
மனவதரின் கான் | |||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | 19 அக்டோபர் 1918 – 15 ஆகஸ்ட் 1947 | ||||||||||||||||||||||||||
முன்னையவர் | பதேகுதீன் கான்ஜி | ||||||||||||||||||||||||||
பின்னையவர் | முடியாட்சி ஒழிக்கப்பட்டது | ||||||||||||||||||||||||||
பிறப்பு | பதேகுதீன் கான் 22 திசம்பர் 1911 மனவதர், பண்டுவ மனவதர் இராச்சியம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய குசராத்து, இந்தியா) | ||||||||||||||||||||||||||
இறப்பு | 13 பெப்ரவரி 2003 கராச்சி, சிந்து மாகாணம்,பாக்கித்தான் | (அகவை 91)||||||||||||||||||||||||||
பேகம் | குத்சியா சித்திக் பேகம், நவாப் அபிதா | ||||||||||||||||||||||||||
குழந்தைகளின் பெயர்கள் | அசுலாம் கான் (துடுப்பாட்ட வீரர், பி. 1935) உட்பட மேலும் 10 பேர் | ||||||||||||||||||||||||||
தந்தை | பதேகுதீன் கான்ஜி | ||||||||||||||||||||||||||
தாய் | பாத்திமா சித்திக் பேகம் | ||||||||||||||||||||||||||
மதம் | இசுலாம் | ||||||||||||||||||||||||||
துடுப்பாட்டத் தகவல்கள் | |||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
| |||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo |
குலாம் மொய்னுதீன் கான்ஜி (Ghulam Moinuddin Khanji) (22 டிசம்பர் 1911 - 13 பிப்ரவரி 2003) பிரித்தானிய இந்தியாவுடன் தொடர்புடைய சமஸ்தானங்களில் ஒன்றான பண்டுவ மானவதர் மாநிலத்தின் ஆட்சியாளராக இருந்தார். இந்தியப் பிரிவினைக்குப் பிறகு பாக்கித்தானுடன் இணைவதற்குத் தேர்வு செய்த போதிலும், அந்த மாநிலம் விரைவில் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அதன் பின்னர் நடந்த வாக்கெடுப்பும் இந்தியாவுடன் இணைவதற்கே வழிவகுத்தது.
ஒரு திறமையான விளையாட்டு வீரரான இவர் மேற்கு இந்தியாவுக்காக முதல்தர துடுப்பாட்டத்தில் விளையாடினார். மேலும் இவரது பிற்கால வாழ்க்கையில் பாக்கித்தான் வளைதடிப் பந்தாட்ட கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்தார்.
கான்ஜி 22 டிசம்பர் 1911 அன்று பண்டுவ மனவதர் இராச்சியத்தின் (இன்றைய குசராத்து, இந்தியா) மனவதரில் நவாப் பதேகுதீன் கான்ஜியின் இரண்டாவது மனைவி பாத்திமா சித்திக் பேகம் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். மொய்னுதீன் ராஜ்கோட்டில் உள்ள ராஜ்குமார் கல்லூரியில் பட்டம் பெற்றவர். [1]
ஆட்சி
[தொகு]கான்ஜி தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு 1918 அக்டோபர் 19 அன்று மனவதரின் அரியணை ஏறினார். [1] இவருக்கு ஏழு வயதாக இருந்ததால், இவரது தாயார் 1931 ஆம் ஆண்டு வரை ( இவரது 20 வயது வரை) ஆட்சியாளராக செயல்பட்டார். [2]
1947 இல் இந்தியாவின் சுதந்திரம் மற்றும் பிரிவினையைத் தொடர்ந்து, சமஸ்தானங்கள் இந்தியா அல்லது பாக்கித்தானில் சேர அல்லது சுதந்திரமாக இருக்க அழைக்கப்பட்டன. செப்டம்பர் 24 அன்று, கான்ஜி பாக்கித்தானின் புதிய அரசுடன் இணைந்தார். [3] இருப்பினும், இந்திய துணைப் பிரதமர் வல்லபாய் படேலின் உத்தரவின் பேரில், இந்தியா அக்டோபர் 22 அன்று மாநிலத்தை இணைத்தது. [4] மனவதர், மங்ரோல் மற்றும் மூன்று மாநிலங்களில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பதிவான 31,434 வாக்குகளில் பாக்கித்தானுக்கு ஆதரவாக 34 வாக்குகளே பதிவாகின. [4]
இவர் ஆரம்பத்தில் சோங்காத் என்னுமிடத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். பின்னர் ராஜ்கோட்டில் கைது செய்யப்பட்டார். 1951 இல், லியாகத்-நேரு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இவர் பாக்கித்தானுக்குச் சென்றார். [5]
விளையாட்டு வீரர்
[தொகு]கான்ஜி, மிர்சா நசிருதீன் மசூத் பயிற்சியளித்த மனவதர் வளைதடி பந்தாட்ட அணியின் நிறுவனர் ஆவார். இவரது தலைமையின் கீழ், அந்த அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 1934 இல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றது. [2] [6] அதே ஆண்டில், மேற்கத்திய ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய வளைதடிப் பந்தாட்ட அணியில் உறுப்பினராக இருந்தார். [2]
கான்ஜி துடுப்பாட்டமும் விளையாடினார். 1935 மற்றும் 1941 க்கு இடையில் ரஞ்சிக் கோப்பையில் மேற்கத்திய இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார் [7] பாக்கித்தானுக்கு குடிபெயர்ந்த பிறகு, பாக்கித்தான் வளைதடிப் பந்தாட்ட கூட்டமைப்பின் தலைவரானார்.[8]
சில சமயங்களில் ரஞ்சிக் கோப்பை துடுப்பாட்ட அணியின் தலைவராகவும் இருந்தார். மேலும் தேசிய மற்றும் சர்வதேச பயணங்களில் மனவதர் துடுப்பாட்டம்-வளைதடி பந்தாட்ட அணிகளை வழிநடத்தினார்.
சொந்த வாழ்க்கை
[தொகு]கான்ஜி 1933 நவம்பர் 14 அன்று குர்வாய் நவாப்பின் மகளான குத்சியா சித்திக் பேகத்தை தனது முதல் மனைவியாக மணந்தார். பின்னர் ஜூலை 1945 இல் நவாப் அபிதா பேகத்தை இரண்டாவது முறையாக மணந்தார். இவருக்கு ஐந்து மகன்களும் ஆறு மகள்களும் இருந்தனர். இவரது கடைசி மகன் 1963இல் பிறந்தார். [2] இவரது மூத்த மகன் அசுலாம் கானும் ஒரு துடுப்பாட்ட வீரர். [9] கான்ஜியின் பேத்திகளில் ஒருவரான சர்வத் கிலானி ஒரு நடிகை. [10]
இறப்பு
[தொகு]கான்ஜி பிப்ரவரி 13, 2003 அன்று தனது 92 வயதில் சிந்து மாகாணத்தின் கராச்சியில் இறந்தார்.[11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Who's Who in India, Burma & Ceylon (Who's Who Publishers (India) Limited, 1936), p. 541
- ↑ 2.0 2.1 2.2 2.3 Heller, Richard; Oborne, Peter (2016). White on Green: A Portrait of Pakistan Cricket. Simon and Schuster. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781471156434.
- ↑ "Junagadh: Legally Pakistan". The News on Sunday. 2 March 2014. பார்க்கப்பட்ட நாள் 5 April 2019.
- ↑ 4.0 4.1 "Patel wanted Hyderabad for India, not Kashmir – but Junagadh was the wild card that changed the game". Scroll.in. பார்க்கப்பட்ட நாள் 5 April 2019.
- ↑ Vidya Dhar Mahajan, Fifty Years of Modern India: 1919-1969 (S. Chand & Co., 1970), pp. 327–328
- ↑ "Mirza Nasiruddin Masud - 1936 Olympics Gold Medallist, UNESCO Chief, Ambassador". பார்க்கப்பட்ட நாள் 2020-10-13.
- ↑ "Nawab of Manavadar". PCB Board. Archived from the original on 21 அக்டோபர் 2022. பார்க்கப்பட்ட நாள் 5 April 2019.
- ↑ "KARACHI: Nawab Moinuddin laid to rest". Dawn. பார்க்கப்பட்ட நாள் 5 April 2019.
- ↑ "Aslam Khan". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 April 2019.
- ↑ "'I have a really good memory package from my India roots'". The Weekend Leader. பார்க்கப்பட்ட நாள் 5 April 2019.
- ↑ "KARACHI: Nawab Moinuddin laid to rest". Dawn. 15 February 2003. பார்க்கப்பட்ட நாள் 5 April 2019.