குலாம் முஹைதீன்
Appearance
எம். குலாம் முஹைதீன்(M. Gulam Mohideen) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1957 ஆம் ஆண்டு திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசின் சார்பாக போட்டியிட்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
பிறப்பு
[தொகு]ஜூலை 1918 ஆம் ஆண்டு பெரும் நிலச்சுவான்தாரான முஹம்மது மீரா இராவுத்தருக்கு மகனாக அப்போதைய மதுரை மாவட்டமும், தற்போதைய தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் பிறந்தார்.
கல்வி
[தொகு]மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கல்வி பயின்றார்.
பொறுப்புகள்
[தொகு]- முன்னாள் செயலாளர், மதுரை மாணவர் கூட்டமைப்பு,
- முன்னாள் செயலாளர், கூட்டுறவு சங்கம் உத்தமபாளையம்,
- முன்னாள் உறுப்பினர், தேனி கூட்டுறவு சங்கம், தேனி,
- வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் முக்கிய பங்காற்றியவர்
- 1942 ஆம் ஆண்டு யுத்த காலத்தில் மாணவர் தலைவராக பல போராட்டங்களை நடத்தியவர்,
- இந்திய தேசிய காங்கிரசில், நகரம், மாவட்டம் மற்றும் மாகாண காங்கிரஸ் தலைவராக பதவிகளை வகித்தவர்,
- விவசாயம் மற்றும் நலப்பனிகளில் ஆர்வமிக்கவர்,
- உத்தமபாளையம் நகர பஞ்சாயத்து தலைவராக பணியாற்றியவர்,
- உத்தமபாளையம் கிளைச் சிறைச்சாலையின் கௌரவ வருகையாளர் மற்றும் நலப்பணியாளர்.[2]