உள்ளடக்கத்துக்குச் செல்

குலாம் முகமது (இசையமைப்பாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குலாம் முகமது
பிறப்பு1903 (1903)
பிகானேர், இராஜபுதனம் முகமை, பிரித்தானிய இந்தியா
இறப்பு17 மார்ச்சு 1968(1968-03-17) (அகவை 64–65)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணிதிரைப்படம் இசையமைப்பாளர், கைம்முரசு இணை
செயற்பாட்டுக்
காலம்
1931 - 1963
விருதுகள்1955: சிறந்த இசை இயக்குனருக்கான தேசிய திரைப்பட விருது: மிர்சா காலிப் (1954)[1]

குலாம் முகமது (Ghulam Mohammed) (1903 - 17 மார்ச் 1968) பாலிவுட் திரைப்படங்களில் பணிபுரியும் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் ஷேர் (1949), பர்தேஸ் (1950),மிர்சா காலிப்(1954),ஷாமா (1961) மற்றும் பாகீசா(1972) போன்ற இந்தித் திரைப்படங்களில் பணியாற்றியதற்காக குறிப்பிடத்தக்கவர்.

மிர்சா காலிப் (1954) படத்திற்காக சிறந்த இசை இயக்குனருக்கான தேசிய திரைப்பட விருதினைப் பெற்றார். திரைப்பட தயாரிப்பாளர் கமல் அம்ரோஹி மற்றும் முன்னணி நடிகை மீனா குமாரி ஆகியோருக்கு இடையேயான திருமண மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக இவரது பாகீசா படத்தின் படப்பிடிப்பு பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு, இறுதியாக குலாம் முகமதுவின் மரணத்திற்குப் பிறகுதான் வெளியிடப்பட்டது.[2][1][3][4][3]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்

[தொகு]

குலாம் முகமது இராசத்தானின் பிகானேரில் இசைக்கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை நபி பக்ச் ஒரு திறமையான கைம்முரசு இணை இசைக்கலைஞர் ஆவார்.[3]

தனது ஆறு வயதில் பஞ்சாபில் உள்ள நியூ ஆல்பர்ட் தியேட்டரிகல் என்ற நாடக நிறுவனத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், பிகானேரில் உள்ள ஆல்பர்ட் தியேட்டர் என்ற நாடக நிறுவனத்தில் பணியாற்றினார். இறுதியில் மாதத்திற்கு 25 ரூபாய்க்கு ஒப்பந்தக் கலைஞராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் நிதி சிக்கல்கள் காரணமாக நிறுவனம் மூடப்பட்டது.

1924இல் மும்பைக்கு வந்த குலாம் முகம்மது, அங்கு எட்டு ஆண்டுகள் போராடி, 1932இல் சரோஜ் மூவிடோனின் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் "ராஜா பர்தாரி" படத்தில் கைம்முரசு இசைக்கும் வாய்ப்பைப் பெற்றார்.[3]

முதலில் இசையமைப்பாளர் நௌசாத்திடம் உதவியாளராக சேர்ந்த இவர் பின்னர் மூத்த திரைப்பட இசையமைப்பாளர் அனில் பிஸ்வாஸுடனும் 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினார். 'டைகர் குயின்'[5] (1947 சுயாதீனமாக இசையமைக்க ஆரம்பித்த இவர் அதைத் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்தார். 1955 ஆம் ஆண்டு மிர்சா காலிப் படத்திற்காக சிறந்த இசை இயக்குனருக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.[1]

பாகீசா (1972) வெளியிடப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு, மார்ச் 17,1968 அன்று அவர் இறந்தார்.[3]உண்மையில், அவரது வழிகாட்டியும் நெருங்கிய நண்பருமான மூத்த திரைப்பட இசையமைப்பாளர் நௌசாத், இவரது மரணத்திற்குப் பிறகு, பாகீசா திரைப்படத்தில் இசையமைக்கும் பணியை முடித்தார்.[1]

விருதுகளும் அங்கீகாரமும்

[தொகு]
  • 1955: படத்திற்காக இசையமைப்புக்கான தேசிய திரைப்பட விருது (1954)[1]
  • எச். எம். வி. சரிகம தங்க வட்டு விருது 1972 [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 (Rajiv Vijayakar) Film 'Pakeezah' one of a kind The Indian Express newspaper, Published 9 March 2012, Retrieved 20 September 2023
  2. "Ghulam Mohammed filmography". Upperstall.com website. Archived from the original on 13 October 2012. Retrieved 20 September 2023.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Sharad Dutt (24 November 2018). "Ghulam Mohammed: The Percussionist Composer". millenniumpost (magazine). https://www.millenniumpost.in/sundaypost/inland/ghulam-mohammed-the-percussionist-composer-328826?infinitescroll=1. பார்த்த நாள்: 28 March 2024. 
  4. "Old Classic Hindi Songs - Ghulam Mohammed Songs Page". Indianscreen.com website. Archived from the original on 2 April 2015. Retrieved 20 September 2023.
  5. "Ghulam Mohammed's composed films". Geocities.com website. 11 April 2001. Archived from the original on 8 September 2005. Retrieved 2 November 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]