குறும்பா மொழி
Appearance
குறும்பா | |
---|---|
நாடு(கள்) | இந்தியா |
பிராந்தியம் | தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டிய பகுதிகள். |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 24,189 (2011 கணக்கீடு)[1] |
திராவிடம்
| |
தமிழ் எழுத்து | |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | kfi |
குறும்பா மொழி (Kurumba language) தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும்.[2] இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில் குறும்பர் பழங்குடிகளால் பேசப்பட்டுவரும் மொழியாகும். இம்மொழியானது 2011 ஆண்டைய மக்கள் கணக்கீட்டின்படி 24,189 பேர்களால் பேசப்படுகிறது. இம்மொழி பேசுவோரிடையே தமிழ் அல்லது கன்னடம் தொடர்பில் இரு மொழித் திறமை குறைவாகவேயுள்ளது. இளம் தலைமுறையினர் 50% கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர். இம்மொழியை எழுதுவதற்குத் தமிழ் எழுத்துக்களே பயன்படுத்தப்படுகின்றன.
குறும்பா மொழி கன்னடத்தோடு நெருங்கிய தொடர்புடையதென்றும், சிதைந்த கன்னடமே அம்மொழி என்றும் சிலர் கூறுகின்றனர். ஆனால் திராவிட மொழியாராய்ச்சியாளரான கால்டுவெல் இம்மொழியைச் சிதைந்த தமிழ் என்று கூறுகிறார்.[3]
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Statement 1: Abstract of speakers' strength of languages and mother tongues - 2011". www.censusindia.gov.in. Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2018-07-07.
- ↑ "Linguistic lineage for Kurumba Kannada". பார்க்கப்பட்ட நாள் 20 November 2010.
- ↑ "தமிழகத்தில் குறிஞ்சி வளம், நூல், கவிஞர் முருகு சுந்தரம், பக்கம், 95-208". பழனியப்பா பிரதர்ஸ். பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2020.