குருவாயூர் வலிய கேசவன்
குருவாயூர் வலிய கேசவன் | |
---|---|
இனம் | ஆசிய யானை |
பால் | ஆண் |
பிறப்பு | சுமார் 1969கள் பீகார் |
இறப்பு | 29 மார்ச் 2021 குருவாயூர் |
நாடு | இந்தியா |
செயற்பட்ட ஆண்டுகள் | 2000 - 2020 |
அறியப்படுவதற்கான காரணம் | திரிச்சூர் பூரம், பிற பூரம் திருவிழாக்கள் |
உரிமையாளர் | குருவாயூர் தேவஸ்வம் |
உயரம் | 3.08 m (10 அடி 1 அங்) |
Named after | குருவாயூர் கேசவன் |
கஜரத்தினம் குருவாயூர் வலிய கேசவன் (Guruvayur Valiya Keshavan) (1969கள்- 29 மார்ச் 2021) என்பது குருவாயூர் குருவாயூரப்பன் கோயிலுக்குச் சொந்தமான யானையாகும். 308 செ.மீ. உயரம் கொண்ட இந்த யானையைக் கொண்டு கேரளாவில் அதிக எண்ணிக்கையில் யானைகள் சிறைபிடிக்கப்பட்டது.[1] 2020 ல் குருவாயூர் பத்மநாபன் என்ற யானை இறந்ததைத் தொடர்ந்து, குருவாயூர் கோவிலில் யானைகளின் தலைவனானது. இது கேரளாவின் மிக உயரமான யானைகளில் ஒன்றாகும். மேலும் குருவாயூர் கோவிலுக்கு சொந்தமான யானைகளில் மிக உயரமானதுமாகும்.[2] வலிய கேசவன் 29 மார்ச் 2021 அன்று பல உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு இறந்தது.[3]
வலிய கேசவன் 1960களின் இறுதியில் பீகாரிலிருந்து கேரளாவிற்கு கொண்டு வரப்பட்டது. 2000இல் குருவாயூர் கோவிலுக்கு நாகேரி வாசுதேவன் நம்பூதிரியால் அர்ப்பணிக்கப்பட்டது. வலிய கேசவனின் முந்தைய பெயர் அய்யப்பன்குட்டி என்பதாகும். இது குருவாயூருக்கு வந்த பிறகு மறுபெயரிடப்பட்டது.[4] கேரளாவின் புகழ்பெற்ற யானையான குருவாயூர் கேசவனின் பெயரிடப்பட்டது. 2017இல் இதற்கு கஜராஜன் என்ற பட்டம் வழங்கப்பட்டது. மேலும் இதற்கு கஜரத்தினம், கஜகுலசத்ரபதி, கஜசாம்ராட், கஜராஜ சக்கரவர்த்தி, கஜகேசரி, மலையாள மாதங்கம் போன்ற பல்வேறு பட்டங்களும் வழங்கப்பட்டன. குருவாயூர் பத்மநாபனின் மரணத்தைத் தொடர்ந்து, மகாவிஷ்ணுவின் சிலையைச் சுமந்து மரியாதை செய்ய குருவாயூர் யானைகளுக்குத் தலைமை ஏற்ற பிறகு, கேரளாவில் யானை பிரியர்களிடையே வலிய கேசவனின் புகழ் 2020இல் அதிகரித்தது. [5] அதிக அளவு ஏக்கம் (கேரளாவில் ஒரு பண்டிகைக்கு யானை பெறக்கூடிய பணம்) பெற்றதற்காக பத்மநாபனின் சாதனையை முறியடித்ததற்காகவும் இது அறியப்படுகிறது. மட்டத்தூர் செமௌச்சிரா கோவிலில் ஒரு நாள் எழுச்சிக்காக சுமார் ₹2.25 லட்சம் தொகையைப் பெற்ற பிறகு வலிய கேசவன் இந்த சாதனையை முறியடித்தது. [6] தனது இறுதி நாட்களில், முதுகில் வீக்கம் ஏற்பட்டதால் இது சிகிச்சை பெற்று வந்தது. பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்ட இந்த யானை, தனது 52 வது வயதில் 29 மார்ச் 2021 அன்று இறந்தது. [7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Guruvayur Valiya Kesavan dies at 51 - The New Indian Express". www.newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-02.
- ↑ "Valiya Kesavan, largest tusker of Guruvayur Devaswom, no more". www.onmanorama.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-02.
- ↑ "ഗുരുവായൂർ വലിയ കേശവൻ ഓർമയായി; തേങ്ങി ആനപ്രേമികൾ". Indian Express Malayalam (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-02.
- ↑ "Malayalam News - ഗജവീരൻ ഗുരുവായൂര് വലിയ കേശവന് ചരിഞ്ഞു; ഗുരുവായൂരപ്പന്റെ തിടമ്പേറ്റുന്ന ആനകളില് പ്രമുഖൻർ elephant guruvayur valiya kesavan died | News18 Kerala, Kerala Latest Malayalam News | ലേറ്റസ്റ്റ് മലയാളം വാർത്ത". malayalam.news18.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-02.
- ↑ "Tusker Valiya Kesavan of Guruvayur Temple dies - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-02.
- ↑ "ഗുരുവായൂര് വലിയ കേശവന് ഏക്കത്തിലും ഒന്നാമന്, ഒരു ദിവസത്തേക്ക് 2,26,001 രൂപ". KVARTHA: MALAYALAM NEWS | KERALA NEWS | KERALA VARTHA | ENTERTAINMENT ചുറ്റുവട്ടം മലയാളം വാര്ത്തകൾ (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-02.
- ↑ "ഗുരുവായൂര് വലിയ കേശവന് ചരിഞ്ഞു". Mathrubhumi (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-02.