குயில் (பேரினம்)
Appearance
குயில் | |
---|---|
ஆண் ஆசியக் குயில் | |
பெண் ஆசியக் குயில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | குக்குலிபார்மிசு
|
குடும்பம்: | |
பேரினம்: | விகோர்சு & கோர்சூபீல்டு, 1827
|
சிற்றினங்கள் | |
யூடினமைசு மெலனோரின்க்கசு |
குயில் (koels, Eudynamys) என்பது ஆசியா, ஆத்திரேலியா, அமைதிப் பெருங்கடல் ஆகிய இடங்களில் காணப்படும் குயில் குடும்பத்தைச் சேர்ந்த பேரினம் ஆகும். இவை பெரிய பால் ஈருருமை குயிலாகவும், பழங்களையும் பூச்சிகளையும் உண்பதோடு, பெரிய சத்தத்தை எழுப்பக் கூடியனவாகவும் உள்ளன. இவை தங்கள் முட்டைகளை பிற பறவைகளின் கூடுகளில் இடும் வழக்கத்தைக் கொண்ட அடை உருவி பறவைகளாகும்.
பாகுபாட்டியல்
[தொகு]குயிலின் பாகுபாட்டியல் குழப்பம் நிறைந்ததாகவுள்ளதுடன், மேலும் அறிய வேண்டிய ஒன்றாகவும் உள்ளது. தனி இனமான பொதுக் குயில் துணை இனத்துடன் காணப்பட, இரு இனங்களுடன் அல்லது மூன்று இனங்களுடன் பின்வருவன காணப்படுகின்றன:
- குயில் (பேரினம்) Eudynamys
- ஆசியக் குயில், Eudynamys scolopaceus[1]
- கருப்பலகுக் குயில், Eudynamys melanorhynchus[1]
- பசுபிக் குயில், Eudynamys orientalis