கும்பகோணம் திருமழிசையாழ்வார் கோயில்
கும்பகோணத்திலுள்ள வைணவத் தலங்களில் ஒன்று திருமழிசையாழ்வார் கோயில். இக்கோயில், 12 ஆழ்வார்களில் ஒருவரான திருமழிசையாழ்வாரின் சமாதி ஆகும்.
அமைவிடம்
[தொகு]திருமழிசையாழ்வார் கோயில் கும்பகோணம் சாத்தாரத் தெருவில் உள்ளது.திருமழிசையாழ்வார் கோயில் எனப்படும் திருமழிசைபிரான் சன்னதியில் 17 சனவரி 2016 முதல் 26 சனவரி 2016 வரை திருமழிசைபிரான் உற்சவமும், சாற்றுமுறையும் கண்டருளினார். 26 சனவரி 2016 காலை மங்களாசாசனம், நண்பகல் திருமஞ்சனம், இரவு கருட வாகனத்தில் பெருமாளுடன் வீதியுலாக் காட்சி சிறப்பாக நடைபெற்றது.
பிற சன்னதிகள்
[தொகு]வலது புறம் வரம் தரும் பெருமாள் பத்மாசனிதாயார் பக்திசார வரதன் சன்னதி அமைந்துள்ளது.
பல்லாண்டு யோகம்
[தொகு]திருமழிசை ஆழ்வார், சார்ங்கபாணி ஆராவமுதப் பெருமாளை வணங்கி, அந்நாள் வரை தான் அருளிய பாசுரங்களைப் பொன்னியில் (காவிரி ஆறு) தவழவிட, திருச்சந்தக விருத்தமும், நான்முகன் திருவந்தாதியும் எதிர்நீச்சலிட்டு வந்தன என்றும், அவற்றை மீண்டும் எடுத்து ஆராவமுதன் திருமுன் வைத்து வணங்கி பல்லாண்டு யோகத்தில் ஆழ்ந்ததாகவும் மரபு வரலாறு உள்ளது. [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ கும்பகோணம் அருள்மிகு ஆதிகும்பேசுவரர் திருக்கோயில் மகாகும்பாபிஷேகம், தெய்வத்திருமலர், 1985