குபீர் (திரைப்படம்)
குபீர் | |
---|---|
இயக்கம் | திலீப் |
தயாரிப்பு | ஆர்ச்சர் சினிமாஸ் |
கதை | திலீப் |
இசை | விஷால் - ஆதித்யா |
நடிப்பு | திலீப் ரவிi வொயிட்hite தமிழ்il பிரதாப் பிரபுhu போவெர் |
ஒளிப்பதிவு | சந்தோஷ் ஸ்ரீராம் |
படத்தொகுப்பு | கிரண். கே. என் |
விநியோகம் | ஆர்ச்சர் சினிமாஸ் |
வெளியீடு | 10 அக்டோபர் 2014 |
ஓட்டம் | 119 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹38 இலட்சம் (US$48,000)[1] |
குபீர் (Gubeer) (2014) ல் வெளிவந்த நகைச்சுவைத் தமிழ்த்திரைப்படம் , எழுத்து மற்றும் இயக்கம் திலீப்குமார் ராஜேந்திரன், தயாரிப்பு ஆர்ச்சர் சினிமாஸ். வார இறுதியில் மகிழ்ச்சிக்காக வெளியில்செல்லும் ஒரு சில ஆண்களைப் பற்றிய படமாகும். இத்திரைப்படம் முதலில் தமிழ்நாட்டில் மட்டுமே வெளியிடப்பட்டது. படத்தின் கட்டமைப்பையும் கதை பற்றியும் ஒரு பாராட்டான விமர்சனங்களையே பெற்றது.
கதை
[தொகு]இது 'சிவப்பு வண்ண ஓவியம்' எனக் கருதப்படும் ஒரு குழுவினரின் கதை. ஒரு 24 மணி நேரத்தில் அவர்கள் வெளிப்படுத்தும் எண்ணங்கள், எல்லாவற்றையும் தன்னிச்சையாக பேசுவது அதை வெளிப்படையாக நினைவுபடுத்துவதும் , போன்றவைகளை நகைச்சுவையாக சொல்கிறது.
நடிகர்கள்
[தொகு]இந்தத் திரைப்படக் குழுவில் 5 நண்பர்கள் இருக்கிறார்கள், அவர்கள் ஒரே மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிந்து, பின்னர் அவ்வேலையை விட்டுவிட்டு பிறகு, அவர்கள் இத்திரைப்படத்துக்காக ஒன்றாக சேர்ந்து நடித்துள்ளனர். நட்சத்திர நடிகர்களைகளைத் தவிர, நடிகர் வெள்ளை, தமிழ், ரவி மற்றும் பிரதாப் ஆகியோரும் நடித்துள்ளனர்.. பிரபு உரிமையாளராக நடித்துள்ளார், இவர்களுடன் சேர்ந்து, போவெர் என்ற பெயரில் ஒரு செல்ல நாயும் நடித்துள்ளது [2]
திலீப் - திலீப்
ரவி - ரவி
வொயிட் -வொயிட்
தமிழ் -தமிழ்
பிரதாப் - பிரதாப்
பிரபு -பிரபு
ராஜிவ் -காவலர் 2
ஆதி - காவலர் 1
மனோஜ் - மனோஜ்
சங்கர் -குடிகாரனாக'[3]
போவெர் - போவெர் '[2]
தயாரிப்பு
[தொகு]திலீப் இப்படத்தை ஜனவரி 2013 இல் எழுத ஆரம்பித்தார். 16 ஏப்ரல் 2013 படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இப்படம் 19 நாட்களில் படமாக்கப்பட்டது. இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு 'ஏ' சான்றிதழை 31 மார்ச் 2014 இல் வழங்கியது. தியாகராசர் பொறியியல் கல்லூரியில் பயின்ற திலீப்பின் நண்பர்களால் இப்படத்திற்கு நிதி வழங்கப்பட்டது.
இசையமைப்பு
[தொகு]8 பாடல்கள் அடங்கிய இதன் ஒலித்தொகுப்பு விஷால் -ஆதித்யாவால் இசையமைக்கப்பட்டு 2014 பிப்ரவரி அன்று கார்த்திக் சுப்புராஜ் மற்றும் பாலாஜி தரணீதரன் ஆகியோரைக் கொண்டு வெளியிடப்பட்டது.[4]
வரவேற்பு
[தொகு]இந்த படம் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது.தினமலர்[5][6][7][8][9][10][11] ஜிகர்தண்டா (திரைப்படம்) பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தை நன்கு பாராட்டினார்.[12] நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் இயக்குநர் பாலாஜி தரணீதரன் , மூடர் கூடம் நவீண் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோரும் இப்படத்தை வெகுவாக வரவேற்றுள்ளனர்.
வெளியீடு
[தொகு]"குபீர்" தமிழ்நாட்டில் ஒரு சில திரையரங்குகளில் மட்டுமே அக்டோபர் 10 அன்று வெளியானது, ஆர்ச்சர் சினிமாஸ் அதன் வெளியீட்டை ஒரு நாளுக்குப் பிறகு வெளியிட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gubeer (2014) - Box office / business". IMDb.com. Retrieved 19 October 2014.
- ↑ 2.0 2.1 "Gubeer Review". www.tamilstar.com. Archived from the original on 2 ஏப்ரல் 2015. Retrieved 10 May 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Gubeer (2014)". www.imdb.com. Retrieved 10 May 2015.
- ↑ S. R. Ashok Kumar. "Audio Beat: Gubeer - Sounds interesting". The Hindu. Retrieved 19 October 2014.
- ↑ "Tamil Cinema news-Tamil movies-Tamil actor actress gallery-Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers". Cinema.dinamalar.com. Retrieved 19 October 2014.
- ↑ "Unconventional, But Worth a Watch". The New Indian Express. Retrieved 19 October 2014.
- ↑ "Cable சங்கர்: குபீர்". Cablesankaronline.com. Retrieved 19 October 2014.
- ↑ "Gubeer Movie Review". YouTube. Retrieved 19 October 2014.
- ↑ "குபீர்- விமர்சனம்". New Tamil Cinema. Archived from the original on 21 அக்டோபர் 2014. Retrieved 19 October 2014.
- ↑ "gubeer tamil movie review". Screen4Screen. Archived from the original on 21 அக்டோபர் 2014. Retrieved 19 October 2014.
- ↑ "Gubeer Reviews". Tamil Cinema. Archived from the original on 12 அக்டோபர் 2014. Retrieved 19 October 2014.
- ↑ "Director Karthik Subbaraj recommends strongly". Behindwoods.com. Retrieved 19 October 2014.