குனூர் ஆறு
Appearance
குனூர் ஆறு Kunur River | |
---|---|
அமைவு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
நகரம் | குசுகரா |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | திலாபோனி, பரீத்பூர், துர்காபூர் |
வெளியேற்றம் | |
⁃ அமைவு | அச்சய் ஆறு |
குனூர் ஆறு (Kunur River) இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் பாயும் ஓர் ஆறாகும். அச்சய் ஆற்றின் முக்கிய துணை நதிகளில் ஒன்றான குனூர் ஆறு 112 கிலோமீட்டர் (70 மைல்) நீளம், பரித்பூர் காவல் நிலைய பகுதியில் முர்சிதாபாத்து மாவட்டத்திலுள்ள பன்சுகரா கிராமத்தின் அருகே தோன்றுகிறது. மழைக்காலங்களில் பல சிறிய நீரோடைகளில் இருந்து நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், பர்தமான் மாவட்டத்தின் ஆசுகிராம் சமூக தொகுதிகள் மற்றும் மங்கல்கோட்டு காவல் நிலையங்களின் பெரிய பகுதிகள் அடிக்கடி வெள்ளத்தில் மூழ்குகின்றன. இது உச்சானி வில்லாக்கு அருகே அச்சய் ஆற்றில் கலக்கிறது.[1]
கிமு 1250–1000 காலத்தைச் சேர்ந்த படிகக் கல் மற்றும் பாறையாக்கப்பட்ட மரத்தின் நுண்கற்கள் அச்சய்-குனூர்-கோபாய் நதி அமைப்பில் பல இடங்களில் காணப்படுகின்றன.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Chattopadhyay, Akkori, Bardhaman Jelar Itihas O Lok Sanskriti (History and Folk lore of Bardhaman District), (in Bengali), Vol I, p 35, Radical Impression. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-85459-36-3
- ↑ "Ancient Bengal in Ancient India". Retrieved 2009-02-14.