உள்ளடக்கத்துக்குச் செல்

குணால் ரோஹிதாஸ் பாட்டீல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குணால் ரோஹிதாஸ் பாட்டீல் (Kunal Rohidas Patil)14 வது மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் உறுப்பினராக உள்ளார். அவர் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் துளே ஊரகம் சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.[1]இவர் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான[2] ரோஹிதாஸ் பாட்டீலின் மகன் ஆவார்.[3] நூறு ஆண்டுகளுக்கு மேலான வயதுடைய கல்வி நிறுவனம், சிவாஜி வித்யா பிரசாரக் சான்ஸ்தாவின் தலைவராக இருந்து வருகிறார்.[4] இந்நிறுவனம் துலேயைச் சார்ந்தது.[5]

22 மார்ச் 2017 அன்று, மகாராஷ்டிரா நிதியமைச்சர் சுதிர் முங்கந்திவாரை மாநில நிதிநிலை அறிக்கை தாக்கல் அமர்வின் போது குறுக்கிட்டதற்காகவும், நான்கு நாட்களுக்கு முன்னர் சட்டசபைக்கு வெளியே நிதிநிலை அறிக்கையின் நகல்களை எரித்ததற்காகவும் பாட்டீல் டிசம்பர் 31 வரை மற்ற 18 சட்டமன்ற உறுப்பினர்களுடன் இடைநீக்கம் செய்யப்பட்டார்.[6] 2019 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் தன்ஜயோதி மனோகர் பாட்டீலுக்கு (படனே) எதிராக 14564 வாக்குகள் வித்தியாசத்தில் துளே கிராமத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Results of Maharashtra Assembly polls 2014". India Today. http://indiatoday.intoday.in/story/maharashtra-assembly-poll-results-bjp-shiv-sena-ncp-congress/1/396659.html. பார்த்த நாள்: 3 November 2014. 
  2. "Lobbying for MLC seat in Cong; Rohidas Patil, Sanjay Dutt in race". The Indian Express. 2011-10-30. http://archive.indianexpress.com/news/lobbying-for-mlc-seat-in-cong--rohidas-patil-sanjay-dutt-in-race/867493/. பார்த்த நாள்: 13 June 2015. 
  3. "6 Mumbai Corporators, 3 Council members make it to Maharashtra Assembly". The Economic Times. 2014-10-20. http://articles.economictimes.indiatimes.com/2014-10-20/news/55236502_1_mumbai-corporators-maharashtra-assembly-narayan-rane. பார்த்த நாள்: 13 June 2015. 
  4. Maharashtra (India); Maharashtra (India). Gazetteers Dept (1974). Maharashtra State Gazetteers: Dhulia. Director of Government Printing, Stationery and Publications, Maharashtra State. p. 779.
  5. "रोहिदास पाटील यांच्याविरोधात फसवणुकीचा गुन्हा दाखल" (in Marathi). IBN-Lokmat. 2011-03-07. http://www.ibnlokmat.tv/archives/36660. பார்த்த நாள்: 13 June 2015. 
  6. http://indianexpress.com/article/india/maharashtra-assembly-ruckus-speaker-suspends-19-mlas-till-december-31/