உள்ளடக்கத்துக்குச் செல்

குடைமிளகாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குடைமிளகாய்
Bell pepper
சிவப்பு, மஞ்சள், பச்சை குடைமிளகாய்கள்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Solanales
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. annuum
இருசொற் பெயரீடு
Capsicum annuum
லின்னேயசு

காரம்: None (SR:0)


குடைமிளகாய் என்பது பயிரிடப்பட்டு விற்பனையாகும் காய்கறிகளில் ஒன்று. குடைமிளகாய்ச் செடியின் செடியியல் பெயர் காப்சிக்கம் ஆன்னம் (Capsicum annuum).[1][2] பல நிறங்களில் காய்க்கும் செடி வகைகளை உருவாக்கிப் பயிரிடுகிறார்கள். குறிப்பாக சிவப்பு, மஞ்சள், பச்சை, செம்மஞ்சள் (ஆரஞ்சு) நிறங்கள் பரவலாக காணப்படுகின்றன. குடைமிளகாய்ச் செடி மெக்சிக்கோ, நடு அமெரிக்கா தென் அமெரிக்காவின் வடபகுதி ஆகிய இடங்களில் இயற்கையில் விளைவது. குடைமிளகாய்ச் செடியின் விதைகளைப் பின்னர் 1493 இல் எசுப்பானியாவுக்கு எடுத்துச் சென்று அங்கிருந்து ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் பரவியது.சேர்ந்தது. உலகில் அதிகமாக குடைமிளகாய் பயிரிடும் நாடுகளின் இன்றும் மெக்சிக்கோ முன்னணி நாடுகளுள் ஒன்றாக உள்ளது.

சொல்லாட்சி

[தொகு]

காப்சிக்கம் ஆன்னம் என்னும் செடியை அமெரிக்கரகள் பெல் பெப்பர் ("bell pepper") பெயரிட்டு வழங்குகிறார்கள். இதில் உள்ள பெப்பர் (மிளகு) பொருத்தமில்லாத பெயர். கிறித்தோபர் கொலம்பசு இச்செடியை ஐரோப்பாவில் அறிமுகப்படுத்திய பொழுது பொருத்தமில்லாத மிளகு என்னும் பொருள் கொண்ட எசுப்பானியச் சொல்லாகிய பிமியெண்ட்டோ (pimiento) என்பதால் அறிமுகப்படுத்தினார். அக்காலத்தில் குடைமிளகாய்க்குத் தொடர்பில்லாத கறுப்பு மிளகு (பைப்பர் நைகுரம், Piper nigrum) மிகவும் விலைமதிப்பு மிக்கதாய் இருந்தது.

குடைமிளகாய், பச்சைக் காயாக
உணவாற்றல்84 கிசூ (20 கலோரி)
4.64 g
சீனி2.40 g
நார்ப்பொருள்1.7 g
0.17 g
0.86 g
உயிர்ச்சத்துகள்அளவு
%திதே
தயமின் (B1)
(5%)
0.057 மிகி
ரிபோஃபிளாவின் (B2)
(2%)
0.028 மிகி
நியாசின் (B3)
(3%)
0.480 மிகி
(2%)
0.099 மிகி
உயிர்ச்சத்து பி6
(17%)
0.224 மிகி
இலைக்காடி (B9)
(3%)
10 மைகி
உயிர்ச்சத்து சி
(97%)
80.4 மிகி
கனிமங்கள்அளவு
%திதே
கல்சியம்
(1%)
10 மிகி
இரும்பு
(3%)
0.34 மிகி
மக்னீசியம்
(3%)
10 மிகி
பாசுபரசு
(3%)
20 மிகி
பொட்டாசியம்
(4%)
175 மிகி
துத்தநாகம்
(1%)
0.13 மிகி
சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன
Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம்

படக் காட்சி வரிசை

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Capsicum annuum (bell pepper)". CABI. 28 November 2017. Retrieved 15 March 2018.
  2. "Capsicum annuum (Grossum Group) (Bell Pepper, Red pepper, Sweet Pepper) | North Carolina Extension Gardener Plant Toolbox". plants.ces.ncsu.edu. Retrieved 22 March 2020.

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடைமிளகாய்&oldid=3906450" இலிருந்து மீள்விக்கப்பட்டது