குடா அஞ்சையா
குடா அஞ்சையா | |
---|---|
பிறப்பு | 1 நவம்பர்1955 தெலுங்கானா |
இறப்பு | 21 சூன் 2016 | (அகவை 60)
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | அஞ்சண்ணா |
பணி | பாடகர் கவிஞர் |
அறியப்படுவது | தெலங்காணா இயக்கம் |
வாழ்க்கைத் துணை | ஹேமா நளினி |
குடா அஞ்சையா (1 நவம்பர் 1955 - 21 ஜூன் 2016) தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பிரபலமான ஒரு இந்திய கவிஞர், பாடகர், பாடலாசிரியர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]குடா அஞ்சையா 1955 ஆம் ஆண்டு அடிலாபாத் மாவட்டம் தண்டேபள்ளி மண்டலத்தின் லிங்கபுரம் கிராமத்தில் லக்ஷ்மய்யா மற்றும் லஷ்மம்மா ஆகியோருக்குப் பிறந்தார். அவரோடு சேர்ந்து அவர் குடும்பத்தில் ஆறு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரியில் ஐந்தாவது பிள்ளையாக இருந்தார். அதே கிராமத்தில் தனது ஆரம்பப் பள்ளிப் படிப்பை பயின்றார். பின்னர், லக்செட்டிபெட்டாவில் இடைநிலைப் படிப்பையும், ஹைதராபாத்தில் பி.பார்மசியையும் முடித்தார். அவரது தந்தை படித்தவராக இருந்ததாலும், பெற்றோர் இருவரும் ராமாயணம், மகாபாரதம் மற்றும் பிற தெலுங்கு நாட்டுப்புறக் கதைகளைப் பாடுவார்கள்.அதைக் கேட்டே வளர்ந்த அஞ்சையாவிற்கு இயல்பாகவே பாடல்கள் மீது ஆர்வம் மிகுந்தது.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]இவர் தெலுங்கானா மாநிலத்தில் பிரபல பாடகர் ஆவார்.ஹேமா நளினி என்பவரை திருமணம் செய்த அவர்களுக்கு மூன்று மகள்கள் இருக்கிறார்கள்.
பிரசித்தி பெற்ற கலாச்சாரம்
[தொகு]குடா அஞ்சையா, தனது பள்ளிப் பருவத்தில், தெலுங்கானா பிராந்தியத்தின் சமூகம் மற்றும் வறட்சியைப் பற்றி எடுத்துரைக்கும் ஊரு இடிச்சி நெய் போடுனா, ஊரி எஸ்கா சத்துன்னா என்ற முதல் பாடலை எழுதினார். மக்கள் மற்றும் பிரபலமான கவிஞர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்ற பிறகு, தெலுங்கானாவில் உள்ள மக்களின் சமூக நிலை பற்றி தொடர்ந்து எழுத முடிவு செய்தார். அவரது எழுத்துக்கள் மற்றும் பாடல்கள் தெலுங்கானா சமூகத்தில் உள்ள உயர் சாதியினருக்கு (டோராக்கள், பட்டேல்கள்) சவாலாக இருந்தன.பாட்டாளி சமூகத்திற்க்கோ ஆறுதலாக இருந்தது.
அவரது முதல் பாடல், அவரது 16 வது வயதில் அருணோதயா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கூட்டத்தில் நல்கொண்டாவில் பாடப்பட்டது. இது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, பின்னர் 16 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது, மேலும் ஆர். நாராயண மூர்த்தி இயக்கிய எர்ர சைனியம் என்ற திரைப்படத்தில் இடம்பெற்றது.
தெலுங்கானா போராட்டம்
[தொகு]தெலுங்கானா போராட்டத்தில் குடா அஞ்சையா முக்கிய பங்கு வகித்தார். 1969 கிளர்ச்சியிலிருந்து தொடங்கி, அவர் அவ்வியக்கத்தின் ஒரு பகுதியாக இருந்தார். மேலும் கிளர்ச்சியின் பிற்பகுதியில், அதற்க்கு தலைமை தாங்கி தெலுங்கானாவின் அனைத்து பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செய்தார், அவரது சக்திவாய்ந்த பாடல்களைப் பாடி ஆர்வலர்களை உற்சாகப்படுத்தினார்.[1]
அவர் ராசமாய் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து தெலுங்கானா தூம் தாம் என்ற கலாச்சார மற்றும் கல்வித் திட்டத்தை காமரெட்டி நகரில் தொடங்கினார். இந்நிகழ்வில் பல்வேறு நாட்டுப்புறக் கலைஞர்கள், பாடகர்கள், நடனக் கலைஞர்கள் மற்றும் கவிஞர்களின் விரிவுரைகள், உரைகள் மற்றும் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. தூம் தாம் பெரும் வெற்றி பெற்றது எனவே அதைத் தொடர்ந்து தெலுங்கானாவின் ஒவ்வொரு கிராமத்திலும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வு பொதுமக்கள், ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை ஒரே மரத்தடியில் ஒன்று சேர்க்கும் களமாக அமைந்து அவர்களை ஒத்த சிந்தனையுள்ளவர்களாய் மாற்றியது.
அவரது பாடல்கள் ராஜிகோ ஒரே ராஜிகோ (தெலுங்கானா இயக்கத்தில் தற்கொலை செய்து கொள்ளாமல் இருக்க தூண்டும் வகையில்), நா தெலுங்கானா, நா தெலங்கானா . . நிலுவெல்ல கயல வீணை , அய்யோனிவா நுவ்வு அவ்வோனிவா தெலங்கானோனிகி தோட்டி பலோனிவா (ஹைதராபாத்தில் ஆந்திரா குடியேறிகளைப் பற்றி) மற்றும் பல பாடல்கள் தூம் தாம் மேடையில் ஆதிக்கம் செலுத்தின. 2001 முதல் தெலுங்கானா மாநிலத்தை அடையும் வரை அவர் தனது பாடல்கள் மூலம் தெலுங்கானா இயக்கத்தை போராடி, வழிநடத்தினார். தெலுங்கானா இயக்கத்தில் அவரது பங்கு தெலுங்கானா முழுவதுமே மிகவும் பாராட்டப்பட்டது மற்றும் புகழப்பட்டது.
திரைப்படவியல்
[தொகு]பாடல்கள் | திரைப்படம் |
---|---|
பத்ரம் கொடுகோ | ரங்குலா கலா |
கொடுக்கோ பங்காரு தந்திரி | எர்ர சைனியம் |
லச்சுலோ லச்சன்னா | ஓசே ராமுலம்மா |
ஊரு மனதிரா | எர்ர சைனியம் |
ராஜிகோ வோர் ராஜிகா | பொரு தெலுங்கானா |
அய்யோனிவா நீவு அவ்வோனிவா | பொரு தெலுங்கானா |
பிற பிரபலமான பாடல்கள்
[தொகு]- வாலேக்கும் சலாம் வாங்கும் போலீஸ் அண்ணா
- நேனு ரானோ பிடோ சர்கார் தவாகனா
புத்தகங்கள்
[தொகு]- பொலிமேரா (நாவல்)
- தலித்த கத்தலு (கதைகள்)
- சினிமா பாடலு
விருதுகள்
[தொகு]- சாகித்ய பண்டு ரத்னா விருது – 1986
- ரஜினி தெலுங்கு சாஹிதி சமிதி விருது −1988
- காந்தா பெண்டேரா தலைப்பு - 2000
- டாக்டர். மலாயா ஸ்ரீ சாஹிதி விருது −2004
- சுத்தலா ஹனுமந்து – ஜனகம்மா விருது – 2015
- கொமுரம் பீம் தேசிய விருது - 2015
- தெலுங்கானா சாகித்ய புரஸ்காரம் – 2015
இறப்பு
[தொகு]குடா அஞ்சய்யா (60 வயது) சிறுநீரகக் கோளாறால் 21 ஜூன் 2016 அன்று ரங்காரெட்டி மாவட்டம் ஹயத்நகர் மண்டல் ராகன்னா குடா கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார் [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "குடா அஞ்சன்னாவை நினைவு கூர்தல்".
- ↑ "Guda Anjaiah Died". 22 June 2016 இம் மூலத்தில் இருந்து 5 August 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160805120328/http://www.telangananewspaper.com/nenu-raanu-biddo-sarkaaru-davakhaanaku-lyricist-guda-anjaiah-passes-away/.