குசாமான்
குசாமான் நகரம் | |
---|---|
நகரம் | |
![]() குசாமான் கோட்டை | |
ஆள்கூறுகள்: 27°09′06″N 74°51′48″E / 27.151727°N 74.863243°E | |
நாடு | ![]() |
மாநிலம் | இராஜஸ்தான் |
மாவட்டம் | தித்வானா-குசாமான் மாவட்டம் |
தோற்றுவித்தவர் | நாகபட்டர் |
அரசு | |
• வகை | உள்ளாட்சி நிர்வாகம் |
• நிர்வாகம் | நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 30 km2 (10 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 98 |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 61,969 |
• அடர்த்தி | 2,100/km2 (5,300/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 341508 |
தொலைபேசி குறியீடு | +91-1586 |
வாகனப் பதிவு | RJ37, RJ21 |
குசாமான் நகரம் (Kuchaman City), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் நாகவுர் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு புதிதாக நிறுவப்பட்ட தித்வானா-குசாமான் மாவட்டத்தில்[1] உள்ள நகராட்சி ஆகும். இதனருகில் தித்வானா நகரம் உள்ளது.
மார்வார் பிரதேசத்தில் அமைந்த குசாமான் நகரம், நாகவுர் நகரத்திற்கு கிழக்கே 119.2 கிலோ மீட்டர் தொலைவிலும்; ஜெய்ப்பூருக்கு கிழக்கே 126.4 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
வரலாறு
[தொகு]கிபி 5 முதல் 8ஆம் நூற்றாண்டு வரை கூரஜர பிரதிகாரப் பேரரசின் (730-1036) தலைநகராக குசாமான் நகரம் இருந்தது. நாகபட்டர் குசாமான் கோட்டையைக் கட்டினார். பின்னர் 16ம் நூற்றாண்டில் சௌகான் வம்சத்தவர்கள் மற்றும் ரத்தோர் இராசபுத்திரர்கள் இந்நகரத்தின் சிற்றரசர்களாக இருந்தனர்.[2]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 30 வார்டுகளும், 9,643 வீடுகளும் கொண்ட இந்நகரத்தின் மக்கள் தொகை 61,969 ஆகும். அதில் ஆண்கள் 31,986 மற்றும் 29,983 பெண்கள் உள்ளனர்.பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு பெண்கள் 937 வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 76.53%ஆகும். இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே மற்றும் 15.89 % மற்றும் 0.17 % ஆக உள்ளனர். இம்மாவட்ட மக்களில் இந்து சமயத்தினர் 75.02%, இசுலாமியர் 22.78%, சமணர்கள் 1.96% மற்றும் பிறர் 0.14% ஆக உள்ளனர்.[3]இங்கு இராசத்தானி, பிராச் மொழி, மார்வாரி மொழி, உருது மொழிகள் பேசுகின்றனர்.
தொடருந்து நிலையம்
[தொகு]
குசாமான் தொடருந்து நிலையம், ராஜ்கோட், ஜெய்ப்பூர், ரந்தம்பூர், ஜோத்பூர், தில்லி, பார்மர், மதுரா, மவூ, சுல்தான்பூர், பிலாஸ்பூர், பிகானேர், கௌகாத்தி நகரங்களை இணைக்கிறது. [4]
படக்காட்சிகள்
[தொகு]-
குசாமான் கோட்டையின் நுழைவாயில்
-
குசாமான் கோட்டைக் காட்சி
-
மார்வார் பிரதேசத்தில் குசாமான் நகரம்