உள்ளடக்கத்துக்குச் செல்

குசராத்தி இலக்கிய கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குசராத்தி இலக்கிய கழகம்
முன்னர் குசராத்தி சாகித்திய மண்டல்
நிறுவிய நாள் பிப்ரவரி 12, 1977; 46 ஆண்டுகளுக்கு முன்னர் (1977-02-12)
வகை அரசுசாரா அமைப்பு
தலைமையகம் இலண்டன்
தலைவர்
விபூல் கல்யாணி
இணையதள முகவரி http://glauk.org
விபூல் கல்யாணி, தற்போதைய தலைவர்

குசராத்தி இலக்கிய கழகம் (Gujarati Literary Academy), முன்பு குசராத்தி சாகித்ய மண்டலம் என்பது ஐக்கிய இராச்சியத்தில் பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும். இந்த அமைப்பு, குசராத்தி இலக்கியம் மற்றும் மொழியின் ஆய்வு, பயன்பாட்டில் ஆர்வமுடைய அனைவரையும் உறுப்பினராக ஏற்றுக்கொண்டு குசராத்திய இலக்கிய மேம்பாட்டினை கொள்கையாகக் கொண்டுள்ளது. புலம்பெயர்ந்த குசராத்தி எழுத்தாளர்கள் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து கவிஞர்கள், சாதி, மதம், பிரிவுகள் அல்லது தேசிய வேறுபாடுகள் ஆகியவற்றிற்கு எந்த முக்கியத்துவமும் இல்லாமல் செயல்படுகிறது. இது குசராத்தி சாகித்ய கழகம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள குசராத்து மாநில அரசாங்கத்தின் குசராத் சாகித்ய கழகம் என்பது அரசு சார்ந்த அமைப்பாகும் எனவே இதில் குழப்பம் வேண்டாம்.

இந்த நிறுவனம் 12 பிப்ரவரி 1977-ல் இலண்டனில் நிறுவப்பட்டது. அப்போதைய 'குஜராத்தி சாகித்ய மண்டல்', தலைவராக தஹ்யாபாய் படேல் மற்றும் செயலாளராக யோகேஷ் படேல் ஆகியோர் செயல்பட்டனர் இந்தியாவிற்கு வெளியே குசராத்தி மொழி மற்றும் இலக்கியப் படிப்புகளை வழங்குதல் உள்ளிட்ட திட்டம் பெரிய லட்சியங்களுடன் குசராத்தி மொழி மேம்பாட்டிற்காகத் துவங்கப்பட்டது. இதன் முதல் தலைவராக மறைந்த கவி தஹ்யாபாய் படேல் செயல்பட்டார். விபூல் கல்யாணி இதன் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றதால், கழகம் சிறந்த தொலைநோக்கு மற்றும் செயல்பாடுகளுடன் முன்னேறியது. இதன் தற்போதைய தலைவர் விபூல் கல்யாணி ஆவார். இவர் இந்த அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராவார்.[1] இவர் குசராத்தி இதழான 'ஒபினியன்' தொகுத்து வரும் ஒரு புகழ்பெற்ற பத்திரிகையாளர் ஆவார். பத்ரா வட்காமா இதன் பொதுச் செயலாளர் ஆவார். இவர் குசராத்தி இலக்கியப் படைப்புகளின் மொழிபெயர்ப்பாளராகவும், புகழ்பெற்ற நூலகராகவும் உள்ளார்.

குசராத்தி இலக்கிய கழகம் இதன் பத்திரிகையான அஷ்மிதா மற்றும் சில தொகுப்புகளை அவ்வப்போது சீரான கால இடைவெளியின்றி வெளியிடுகிறது. இந்த அமைப்பு குசராத்தி மொழியினைக் கற்றுக்கொள்ளவும் தேர்வுகளுக்காகவும் குசராத்தி மொழிப் பாடப் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளது. இதன் தேர்வுத் திட்டத்தினை குசராத்து மாநில அரசு அங்கீகரித்துள்ளது. மேலும் இந்த அரசாணையில் அப்போதைய குசராத்து கல்வி அமைச்சர் கர்சந்தாசு சோனேரி கையெழுத்திட்டார்.

குசராத்திய இலக்கிய கழகம் பல ஆண்டுகளாக எண்ணற்ற மொழி மேம்பாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது. உமாசங்கர் ஜோஷி, தர்ஷக், நிரஞ்சன் பகத், ரகுவீர் சவுத்ரி, யஷ்வந்த் சுக்லா, குஜராத்தின் முதல்வர் மறைந்த சிமன்பாய் படேல் மற்றும் பலர் உட்படக் குசராத்தி இலக்கியத்தில் நூற்றுக்கணக்கான நன்கு அறியப்பட்ட இலக்கியப் பேச்சாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர். முன்னாள் இங்கிலாந்து கல்வி அமைச்சர் ரோட்ஸ் பாய்சன், கீத் வாஸ் (நாடாளுமன்ற உறுப்பினர்)., லார்ட் தேசாய், லார்ட் டோலாக்கியா, லார்ட் பரேக் மற்றும் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

புலம்பெயர் குசராத்தி எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டி உட்படப் பல போட்டிகளையும் இந்த சங்கம் தொடர்ச்சியாக ஏற்பாடு செய்கிறது.

மேனாள் தலைவர்கள்[தொகு]

  • கவி தஹ்யாபாய் படேல்
  • பல்வந்த் நாயக்
  • யோகேஷ் படேல்
  • போபட்லால் ஜரிவாலா
  • வல்லப நாதா
  • பத்ரா வட்கம
  • மருத்துவர் அனில் ககல்வாலா

மேற்கோள்கள்[தொகு]

  1. "About Us" (in Gujarati). Gujarati Literary Academy. பார்க்கப்பட்ட நாள் March 21, 2013.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குசராத்தி_இலக்கிய_கழகம்&oldid=3685852" இலிருந்து மீள்விக்கப்பட்டது