குங்குமம்

குங்குமம் இந்துப்பெண்கள் நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ள பயன்படுத்தும் ஒரு பொடி. இயற்கை முறையில் விரலிமஞ்சள், வெண்காரம், படிகாரம், கஸ்தூரி மஞ்சள் ஆகியன சேர்ந்து அரைக்கபட்ட பொடியுடன் நல்லெண்ணயை கலக்கி குங்குமம் தயாரிக்கப்படுகிறது. மஞ்சளும் காரமும் வேதிவினையாற்றுவதால் சிவப்பு நிறம் கிடைக்கிறது. அம்மன் கோவில்களில் பிரசாதமாக குங்குமம் தரப்படுகிறது. செயற்கையாகத் தயாரிக்கப்படும் குங்குமத்தை இடுவதால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. மேலும், இக்காலத்தில் ஒட்டுப்பொட்டுக்கள் பயன்படுத்த எளிதாகவும் மலிவாகவும் கிடைப்பதால் குங்குமம் கோவில்களிலும் இந்துசமயச் சடங்குகளின்போதும் மட்டுமே பயனாகிறது.[1][2][3]
வேறு நாட்டு இந்துக்களை விடவும் நேபாளநாட்டு இந்துப்பெண்கள். குங்குமத்தை மதிப்பது அதிகம் என்றே சொல்லலாம். இன்றளவும் நேபாளத்தில் குங்குமத்துக்கு தனி மதிப்பு உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Basu, Baman Das (2007). Sri Narada Pancharatnam (in ஆங்கிலம்). Cosmo Publications. p. 219. ISBN 978-81-307-0539-2.
- ↑ Susie J. Tharu, Ke Lalita (1993-04-01). Women Writing in India: The twentieth century (Volume 2 of Women Writing in India: 600 B.C. to the Present). Feminist Press, 1993. ISBN 978-1-55861-029-3.
... Sindoor is a red powder worn by married women in the parting of the hair ...
- ↑ "Sindoor – History and Significance | Sanskriti - Hinduism and Indian Culture Website" (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-03-04. Retrieved 2023-06-11.