உள்ளடக்கத்துக்குச் செல்

கீழ் ஏரி

ஆள்கூறுகள்: 23°16′0″N 77°25′0″E / 23.26667°N 77.41667°E / 23.26667; 77.41667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீழ் ஏரி
Lower Lake
Children kayaking on the Lower Lake
கீழ் ஏரியில் படகுப் பயணம் செய்யும் குழந்தைகள்
Location of Bhopal's Lower Lake
Location of Bhopal's Lower Lake
கீழ் ஏரி
Lower Lake
போபாலில் கீழ் ஏரி அமைவிடம்
Location of Bhopal's Lower Lake
Location of Bhopal's Lower Lake
கீழ் ஏரி
Lower Lake
கீழ் ஏரி
Lower Lake (இந்தியா)
அமைவிடம்போபால், மத்தியப் பிரதேசம், இந்தியா
ஆள்கூறுகள்23°16′0″N 77°25′0″E / 23.26667°N 77.41667°E / 23.26667; 77.41667
முதன்மை வரத்துமேல் ஏரியின் கசிவு
முதன்மை வெளியேற்றம்கலாலி ஆறு
வடிநிலப் பரப்பு9.6 km2 (3.7 sq mi)
கட்டியது1794
மேற்பரப்பளவு1.29 km2 (0.50 sq mi) (2011)
சராசரி ஆழம்6.2 m (20 அடி)
அதிகபட்ச ஆழம்10.7 m (35 அடி)
மேற்கோள்கள்பன்னாட்டு ஏரிச் சுற்றுச்சூழல் குழு[1]

கீழ் ஏரி (Lower Lake - Bhopal)அல்லது சோட்டா தலாப் என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான போபாலில் உள்ள ஒரு ஏரி ஆகும். போஜ்டல் அல்லது மேல் ஏரியுடன் சேர்ந்து, இது போஜ் ஈர நிலத்தை உருவாக்குகிறது.

வரலாறு

[தொகு]
கீழ் ஏரி is located in போபால்
கீழ் ஏரி
போபாலில் கீழ் ஏரி அமைவிடம்

இந்த ஏரி 1794-ல் நகரத்தை அழகுபடுத்துவதற்காக உருவாக்கப்பட்டுக் கட்டப்பட்டது. நவாப் ஹயாத் முகம்மது கான்பகதூரின் மந்திரி சோட் கான் என்பவரால் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.[2] முந்தைய பல கிணறுகள் இந்த ஏரியில் இணைக்கப்பட்டன. கீழ் ஏரி 'புல் புக்தா' என்ற பாலத்திற்கு அருகில் உள்ளது. கீழ் ஏரி "புக்தா-புல் தலாவ்" என்றும் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.[3]

நிலவியல்

[தொகு]

கீழ் ஏரி மேல் ஏரிக்குக் கிழக்கே அமைந்துள்ளது. ஒரு மண் அணை இரண்டு ஏரிகளையும் பிரிக்கிறது. இரண்டு ஏரிகளும் உயரப் பகுதியில் கட்டப்பட்டுள்ளன. மேல் ஏரியின் மிகக் குறைந்த மட்டமானது கீழ் ஏரியின் மிக உயர்ந்த மட்டத்திற்குக் கீழே உள்ளது.

கீழ் ஏரி 1.29 ஹெக்டேர் பரப்பளவில் (நீர் பரவல்) அமைந்துள்ளது. இதன் நீர்ப்பிடிப்பு பகுதி 9.6 சதுர கி. மீ. ஆகும். இந்த ஏரி மேல் ஏரியிலிருந்து நிலத்தடி கசிவு நீரைப் பெறுகிறது. 1850களில், ஏரியின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச ஆழம் முறையே 11.7 மீ மற்றும் 6.16 மீ ஆகும்.[2] 2011-ன் படி, அதிகபட்ச ஆழம் 10.7 மீ ஆகும்.

கீழ் ஏரிக்கு எந்த புதிய நீர் ஆதாரமும் இல்லை; இது மேல் ஏரியிலிருந்து கசிவு நீரையும், 28 கழிவுநீர் நிரப்பப்பட்ட நுல்லாக்களிலிருந்து வடிகால்களையும் பெறுகிறது.[4] இது பேட்வா ஆற்றின் சிறிய துணை ஆறான கலாலி ஆற்றில் இணைகின்ற பத்ரா ஆற்றில் வடிகிறது.

மாசுபாடு

[தொகு]

நகரிலிருந்து வெளியேறும் சாக்கடை வடிகால், நன்னீர் ஆதாரம் இல்லாதது மற்றும் வணிக ரீதியில் துணி துவைப்பது போன்ற காரணங்களால் கீழக்கரை ஏரி மாசுபடுகிறது. முழு ஏரியும் ஊட்டஞ் செறிதலால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் நீர் குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Lower Lake". International Lake Environment Committee. Archived from the original on 2012-01-07. பார்க்கப்பட்ட நாள் 2011-10-28.
  2. 2.0 2.1 "Places of Interest in Bhopal". Collectorate, Bhopal. பார்க்கப்பட்ட நாள் 2011-10-28."Places of Interest in Bhopal".
  3. Pranab Kumar Bhattacharyya (1977). Historical Geography of Madhya Pradesh from Early Records. Motilal Banarsidass. p. 275. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8426-9091-1.
  4. 4.0 4.1 Prashant S. Khirwadkar (2000). "Lake front planning for a sustainable lake". New trends in water and environmental engineering for safety and life (illustrated ed.). Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-5809-138-3.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழ்_ஏரி&oldid=3829393" இலிருந்து மீள்விக்கப்பட்டது