உள்ளடக்கத்துக்குச் செல்

கீழ்வேளூர் யாதவ நாராயணப் பெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கீழ்வேளூர் யாதவ நாராயணப் பெருமாள் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அமைந்துள்ள வைணவக்கோயிலாகும்.

அமைவிடம்

[தொகு]

இக்கோயில் நாகப்பட்டினம்-திருவாரூர் சாலையில் கீவளூரில் இருந்து கச்சனம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. திருக்கண்ணங்குடியின் அபிமானத்தலமாகவும், பஞ்ச நாராயணத் தலங்களில் ஒன்றாகவும் உள்ளது. [1]

இறைவன், இறைவி

[தொகு]

நின்ற நிலையில் யாதவ நாராயணப்பெருமாள் உள்ளார். இறைவி யாதவவல்லி என்ற பெயரில் தனிச்சன்னதியில் உள்ளார். இப்பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவியோடு உள்ள வெங்கடாஜலபதியின் சன்னதியும் இக்கோயிலில் உள்ளது. [1]

வரலாறு

[தொகு]

சூரபத்மனை வதம் செய்த தோஷம் நீங்குவதற்காக முருகன் அட்சயலிங்கேசுவரை நோக்கி தவமிருந்ததாகவும், தோஷம் நீங்கவே யாதவப் பெருமக்கள் மகிழ்ச்சியடைந்து பசுக்களின் பாலை திருமாலுக்கு அளித்ததாகவும், அதனை ஏற்றுக்கொள்வதற்காக பெருமாள் இங்கு இருப்பதாகவும் கூறுகின்றனர். [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014