உள்ளடக்கத்துக்குச் செல்

கீதா அரிஅரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீதா அரிஅரன்
பிறப்பு1954 (அகவை 69–70)
கோயம்புத்தூர், தமிழ்நாடு
பணிஎழுத்தாளர்

கீதா அரிஅரன் (Githa Hariharan, பிறப்பு: 1954) என்பவர் எழுத்தாளர், நூலாசிரியர், இதழாளர் எனப் பன்முகத் திறமைக் கொண்ட பெண்மணி ஆவார் பாலஸ்தீன போராட்டத்துக்கு ஆதரவு திரட்டுபவர். பெண்களின் உரிமைகளுக்குப் போராடுபவர்.

இளமைக் காலம்

[தொகு]

தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் பிறந்தார். மும்பையிலும் மணிலாவிலும் வளர்ந்தார். மும்பைப் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டமும் பேர்பீல்ட் பல்கலைக் கழகத்தில் தகவல்இயல் கல்வியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

பணிகள்

[தொகு]

இந்து மைனாரிட்டி மற்றும் கார்டியன் சட்டத்தில் பெண்கள் நலத்திற்கு எதிரான அம்சங்கள் உள்ளன என நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். முதிரா அகவையரின் (MINOR) இயற்கைக் காப்பாளர் (NATURAL GUARDIAN) என்பவர் தந்தை மட்டுமே என்று சட்டத்தில் சொல்லப் பட்டதை எதிர்த்து இவர் வழக்குத் தொடர்ந்ததன் விளைவு 'தாயும் இயற்கை காப்பாளார் ஆவார்' என்று தீர்ப்பு நீதிமன்றத்தால் வழங்கப் பட்டது. நியூயார்க்கில் பொது ஒலி பரப்பு நிறுவனத்தில் கீதா அரிஅரன் பணியாற்றினார்[1]. ஓரியன்ட் லாங்மன் என்னும் பதிப்பக நிறுவனத்தில் பதிப்பாசிரியராகவும் இருந்தார். கொல்கத்தாவிலிருந்து வெளிவரும் ’தி டெலிகிராப்’ என்னும் செய்தித் தாளில் பல்வேறு பிரசினைகள் பற்றி பத்திக் கட்டுரைகளை எழுதினார். ஜார்ஜ் வாசிங்டன் பல்கலைக் கழகம், கான்டர்பரி பல்கலைக் கழகம் போன்றவற்றில் வருகைப் பேராசிரியராக இருந்தார். 2005 சூன் முதல் சூலை வரை சிங்கப்பூரில் 'ரைட்டர் இன் ரெசிடன்ஸ்' என்னும் பதவியில் இருந்து பணி செய்தார். இரவின் ஆயிரம் முகங்கள் என்னும் இவரது முதல் புதினத்துக்கு காமன்வெல்த்து எழுத்தாளர்கள் பரிசு வழங்கப்பட்டது.

எழுதிய நூல்கள்

[தொகு]
  • Fugitive Histories
  • In Times of Siege
  • When Dreams Travel
  • The Ghosts of Vasu Master
  • The Art of Dying
  • The Thousand Faces of Night
  • The Winning Team
  • From India to Palestine: Essays in Solidarity

மேற்கோள்கள்

[தொகு]

சான்றுகள்

[தொகு]

Sources

[தொகு]
  • Kader Aki (2007). Mythology and Reality in Githa Hariharan's "The Thousand Faces of Night". GRIN Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-638-76601-2.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீதா_அரிஅரன்&oldid=2718417" இலிருந்து மீள்விக்கப்பட்டது