உள்ளடக்கத்துக்குச் செல்

கி. ஆம்ஸ்ட்ராங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. ஆம்ஸ்ட்ராங்
முன்னாள் மாநிலத் தலைவர், பகுஜன் சமாஜ் கட்சி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1977-01-31)31 சனவரி 1977
பெரம்பூர், தமிழ் நாடு, இந்தியா
இறப்பு5 சூலை 2024(2024-07-05) (அகவை 47)
சென்னை, தமிழ் நாடு இந்தியா
அரசியல் கட்சிபகுஜன் சமாஜ் கட்சி

கி. ஆம்ஸ்ட்ராங் (K. Armstrong, ஜனவரி 31, 1977 - சூலை 5, 2024) என்பவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாட்டுப் பிரிவின் முன்னாள் மாநிலத் தலைவராவார். 2024 ஆம் ஆண்டு சூலை மாதம் 5ஆம் நாள் தனது வீட்டின் வாசலில் படுகொலை செய்யப்பட்டார்.[1][2]

இளமைக் காலம்

[தொகு]

ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவருக்கு மகனாக 1977 சனவரி 31ஆம் நாள் பிறந்தார்.[3] திருப்பதி வெங்கடேசுவரா பல்கலைக்கழகத்தில் இளங்கலைச் சட்டம் படித்து, வழக்குரைஞராகப் பணியாற்றி வந்தார்.

அரசியல் வாழ்வு

[தொகு]

2000ஆம் ஆண்டு புரட்சி பாரதம் கட்சியில் இணைந்து தனது அரசியல் வாழ்வைத் தொடங்கினார். 2006-இல் டாக்டர் பீமாராவ் தலித் அசோசியேஷன் என்ற அமைப்பைத் தொடங்கினார். 2006 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு 99ஆவது வட்டத்தின் மாமன்ற உறுப்பினராகத் தேர்வானார்.[3] 2007ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். 2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[4] 2007 முதல் இறக்கும் வரை 17 ஆண்டுகள் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்து வந்தார்.[5]

படுகொலை

[தொகு]

2024 சூலை 5ஆம் நாள் வெள்ளி மாலையில் தனது வீட்டின் வெளியே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது ஆறு நபர்கள் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.[6] இந்தப் படுகொலைக்கு நாடு முழுவதிலுமிருந்து பல கட்சித் தலைவர்கள் கண்டனமும் இரங்கலும் தெரித்தனர். சென்னை முழுவதும் காவல்துறை கண்காணிப்பைப் பலப்படுத்தினர்.[7] இக்கொலைக்குத் தொடர்புடைய ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலு, ராமு, திருமலை, செல்வராஜ், அருள் உள்ளிட்ட எட்டு நபர்கள் சரணடைந்துள்ளனர்.[8][9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ஆம்ஸ்ட்ராங் கொலை - ஜெ.பி.நட்டா கண்டனம்". தினமணி. https://www.dinamani.com/india/2024/Jul/06/jp-nadda-condemns-k-armstrong-murder. பார்த்த நாள்: 6 July 2024. 
  2. "A gold trading scam, rivalry with a gangster, and a brother's revenge – police crack murder of BSP's Tamil Nadu chief", The Indian Express (in ஆங்கிலம்), 2024-07-06, பார்க்கப்பட்ட நாள் 2024-07-07
  3. 3.0 3.1 "கவுன்சிலர் டூ பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர்... யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?". நியூஸ்18. https://tamil.news18.com/tamil-nadu/bsp-tamil-nadu-leader-armstrong-history-and-background-1514223.html. பார்த்த நாள்: 6 July 2024. 
  4. "candidate profile". மைநேட்டா.
  5. "வார்டு கவுன்சிலர் முதல் மாநிலத் தலைவர் வரை - பகுஜன் சமாஜ் ஆம்ஸ்ட்ராங்கின் அரசியல் பயணம்". பிபிசி. https://www.bbc.com/tamil/articles/c720w1y9n8qo. பார்த்த நாள்: 6 July 2024. 
  6. "Who was K Armstrong? BSP's Tamil Nadu unit chief murdered in". டைம்ஸ் ஆப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/articleshow/111530389.cms. பார்த்த நாள்: 6 July 2024. 
  7. "பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை: சென்னையில் பதற்றம் - நடந்தது என்ன?". இந்து தமிழ். https://www.hindutamil.in/news/crime/1275363-bsp-tn-chief-armstrong-murdered-in-chennai-3.html. பார்த்த நாள்: 6 July 2024. 
  8. "ஆம்ஸ்ட்ராங் படுகொலை: 8 பேர் சரண்... ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப் பழி கொலையா?!". விகடன். https://www.vikatan.com/government-and-politics/bsp-leader-murder-case-8-surrender-in-chennai. பார்த்த நாள்: 6 July 2024. 
  9. "ஆம்ஸ்ட்ராங் படுகொலை: ஆட்டோ ஓட்டுனர் போட்டுக் கொடுத்த ஸ்கெட்ச் - வெளியான அதிர்ச்சி தகவல்". தினத்தந்தி. https://www.dailythanthi.com/news/state/armstrong-murder-case-sketch-given-by-auto-driver-shocking-information-released-1112846. பார்த்த நாள்: 6 July 2024. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கி._ஆம்ஸ்ட்ராங்&oldid=4047580" இலிருந்து மீள்விக்கப்பட்டது