கிளியூர்
கிளியூர் | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கள்ளக்குறிச்சி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 606102 |
கிளியூர் (Kiliyur) என்பது இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.[1]
வரலாறு
[தொகு]கிளியூரானது மலையமான்களின் தலைநகராயிருந்த ஊர் ஆகும். திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மலையமான் மரபினருள் ஒரு பிரிவினர், இந்தக் கிளியூரைத் தலைநகராகக் கொண்டு திருக்கோவலூர் வட்டத்தின் தென்பகுதியை ஆண்டதால் கிளியூர் மலையமான்கள் என அழைக்கப்பட்டனர். ஒரு காலத்தில் கிளியூர் ஒரு தலைநகராயிருந்தது என்பதை மெய்ப்பிக்கும் சுவடுகள் சில, இவ்வூர் வட்டாரத்தில் உள்ளன. கிளியூர் பற்றிய வரலாற்றுச் செய்திகள் பல இவ்வட்டாரத்து மக்களால் மிகவும் பெருமையாகப் பேசப்படுகின்றன. இந்தப் பகுதி ஒரு காலத்தில் மகத நாடு எனவும் அழைக்கப்பட்டது.[2]
கிளியூர் திருக்கோவலூருக்குத் தென்கிழக்கே 20 கி.மீ. தொலைவு அளவில் உள்ளது. கிளியூருக்கு வடக்கே திருக்கோவலூர் - கடலூர் மாநில நெடுஞ்சாலையும், கிழக்கே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையும், தெற்கே உளுந்துர்ப்பேட்டை - கள்ளக்குறிச்சி மாநில நெடுஞ்சாலையும், மேற்கே ஆசனூர் - திருக்கோவலூர் மாவட்ட நெடும்பாதையும் உள்ளன. இந்த நான்கு சாலைகட்கும் நடுவே கிளியூர் உள்ளது.
திருநறுங்குன்றத்திற்குத் தெற்கே 5 கி.மீ. தொலைவிலும், பிள்ளையார் குப்பத்திற்கு மேற்கே 5 கி.மீ. தொலைவிலும், களமருதூருக்கு வடமேற்கே 5 கி.மீ. தொலைவிலும், இறையூருக்குக் கிழக்கே 5 கி.மீ. தொலைவிலுமாக - இந்த நான்கு ஊர்கட்கும் நடுவே கிளியூர் உள்ளது.
சான்றுகள்
[தொகு]- ↑ http://www.onefivenine.com/india/villages/Villupuram/Ulundurpet/Kiliyur
- ↑ புலவர் சுந்தர சண்முகனார் (1993). "கெடிலக் கரை நாகரிகம்". நூல். மெய்யப்பன்
தமிழாய்வகம். pp. 297–298. பார்க்கப்பட்ட நாள் 11 சூன் 2020.
{{cite web}}
: line feed character in|publisher=
at position 11 (help)