கிலாயூயா எரிமலை
Appearance
கிலாயூயா | |
---|---|
எரிமலையிலிருந்து வெளியேறும் புகையும் எறிகற்குழம்பும். | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 1,277 m (4,190 அடி) |
புவியியல் | |
அமைவிடம் | ஹவாய் தீவு, ஐக்கிய அமெரிக்கா |
நிலவியல் | |
பாறையின் வயது | 300,000 தொடக்கம் 600,000 வருடங்கள் |
மலையின் வகை | கேடைய எரிமலை |
கடைசி வெடிப்பு | ஜனவரி 03, 1983 தொடக்கம் தற்போது வரை |
கிலாயூயா என்பது ஹவாய் தீவுகளில் உள்ள, கேடைய எரிமலை வகையைச் சார்ந்த ஒரு எரிமலை ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 1277 மீ. உயரமானது. ஹவாய் மொழியில் கிலாயூயா என்பது நன்றாகப் பரவல் எனப் பொருள்படும். இது 1983 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை கற்குழம்பைக் கக்கி வருகின்றது. இது ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறையால் அமெரிகாவிலேயே மிகவும் ஆபத்தான எரிமலையாக இனங்காணப்பட்டுள்ளது. புவியில் செயற்பாடு கூடிய எரிமலைகளில் இதுவும் ஒன்று.