கிறித்தைன் தார்தன்
கிறித்தைன் தார்தன் Christine Darden | |
---|---|
கிறித்தைன் தார்தன், இலாங்லே ஒன்றிய திட்ட காற்ருச் சுருங்கை, 1975. தகவல் வாயில்: நாசா | |
பிறப்பு | வார்ப்புரு:B-da மன்றோ, வட கரோலினா |
துறை | வானியக்கப் பொறியியல் |
கல்வி கற்ற இடங்கள் | ஆம்ப்டன் பலகலைக்கழகம், 1962; வர்ஜீனியா அரசு பல்கலைக்கழகம், 1967; ஜார்ஜ் வழ்சிங்டன் பல்கலைக்கழகம், 1985 |
அறியப்படுவது | நாசாவின் ஒலிமுழக்கக் குழுவின் தொழில்நுட்பத் தலைவர் |
விருதுகள் | ரே. டி. வெதர்சின் தொழில்நுட்பச் சாதனை விருது, 1985
முதுநிலைச் செயல் அலுவலர் வாழ்க்கைப்பணி வளர்ச்சி ஆய்வுநல்கை, 1994 அறிவியல் தொழில்நுட்பத்துக்கான காண்டேசு விருது , தேசியக் கருப்பின மகளிர் நூற்றுவர் கூட்டமைப்பு, 1987 |
கிறித்தைன் மான் (Christine Mann) எனப்பட்ட முனைவர் கிறித்தைன் தார்தன் (Dr. Christine Darden) (பிறப்பு: செப்டம்பர் 10, 1942 ) ஓர் அமெரிக்கக் கணிதவியலாளரும் தரவுப் பகுப்பாய்வாளரும் வானியக்கப் பொறியாளரும் ஆவார். இவர் நாசாவில் 40 ஆண்டுகளுக்கு வானியக்கவியலில் தன் வாழ்நாளைச் செலவிட்டார். இவர் அப்போது மீயொலி விரைவுப் பறப்பு, ஒலிமுழக்கம், ஆகியவற்ரில் ஆய்வு மேற்கொண்டார். இவர் 1967 இல் இலாங்லே ஆராய்ச்சி மையத்தில் சேரும் முன்பு வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் கணிதவியலில் மூதறிவியல் பட்டம் பெற்று அங்கே கல்வி பயிற்றுவித்துள்ளார். இவர் ஜார்ஜ் வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியலில் 1983 இல் முனைவர் பட்டம் பெற்றார். இவர் தனறிவியல் புலத்தில் பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இவர்தான் முதலில் இலாங்லே ஆராய்ச்சி மையத்தில் முதுநிலை செயல் அலுவலராக பதவி உயர்வு தரப்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணி ஆவார். இது கூட்டாட்சிப் பொதுப்பணியிலேயே உயர்தரப் பதவியாகும்.
மறைநிலை ஆளுமைகள்: அமெரிக்கக் கனவும் விண்வெளிப் போட்டியில் உதவிய கருப்பினப் பெண் கணிதவியலாளர்களும் (2016), நாசாவில் 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தாக்கம் விளைவித்த ஆப்பிரிக்க அமெரிக்கக் கருப்பினப் பெண் கணிதவியலாளர்களும் பொறியாளர்களும் பற்றிய வரலாறு, எனும் மார்கோட் இலீ செட்டெர்லி எழுதிய நூலில் விவரித்த ஆராய்ச்சியாளர்களில் தார்தன் ஒருவர் ஆவார்.[1]
இளமையும் வாழ்க்கைப்பணியும்
[தொகு]நாசாவின் மாந்தக் கணிப்பாளர்கள்
[தொகு]விருதுகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]புற இணைப்புகள்
[தொகு]- 1942 பிறப்புகள்
- வாழும் நபர்கள்
- அமெரிக்கப் பெண் கணிதவியலாளர்கள்
- ஆப்பிரிக்கப் பெண் கணிதவியலாளர்கள்
- ஆப்பிரிக்கப் பெண் அறிவியலாளர்கள்
- அமெரிக்கப் பெண் அறிவியலாளர்கள்
- அமெரிக்க வான்-விண்வெளிப் பொறியியலாளர்கள்
- ஆப்பிரிக்க வான்-விண்வெளிப் பொறியியலாளர்கள்
- ஆப்பிரிக்க அமெரிக்கக் கணிதவியலாளர்கள்
- அமெரிக்கக் கணிதவியலாளர்கள்
- ஆப்பிரிக்கக் கணிதவியலாளர்கள்
- மேற்குப் புலக் கணிப்பாளர்கள்
- மாந்தக் கணிப்பாளர்கள்