உள்ளடக்கத்துக்குச் செல்

கிறித்துமசு தீவு (தசுமேனியா)

ஆள்கூறுகள்: 39°40′48″S 143°49′12″E / 39.68000°S 143.82000°E / -39.68000; 143.82000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிறித்துமசு தீவு
கிங் தீவின் மேல் பகுதியில் கிறுத்துமசு தீவு
கிறித்துமசு தீவு is located in Tasmania
கிறித்துமசு தீவு
கிறித்துமசு தீவு
பாசு நீரிணையில் கிறுத்துமசு தீவின் அமைவிடம்
புவியியல்
அமைவிடம்தென்கடல் நடுஅகலாங்கு, பாசு நீரிணை
ஆள்கூறுகள்39°40′48″S 143°49′12″E / 39.68000°S 143.82000°E / -39.68000; 143.82000
தீவுக்கூட்டம்புத்தாண்டு தீவு
பரப்பளவு63.49 ha (156.9 ஏக்கர்கள்)
நிர்வாகம்
ஆத்திரேலியா

கிறித்துமசு தீவு (Christmas Island (Tasmania)) என்பது புத்தாண்டு குழுவின் ஒரு பகுதியாகும். இது ஆத்திரேலியாவின் தசுமேனியா வடமேற்கு கடற்கரையில் பெரும் ஆத்திரேலிய விரிகுடாவில் அமைந்துள்ள ஒரு கருங்கல் தீவு ஆகும்.[1][2][3]:47–49 இதன் பரப்பளவு 63.49 ஹெக்டேர் ஆகும்.

புத்தாண்டு குழு

[தொகு]

புத்தாண்டு குழுவில் நான்கு தீவுகள் உள்ளன.

  • கிங் தீவு
  • புத்தாண்டு தீவு மற்றும்
  • கவுன்சிலர் தீவு
  • கிறித்துமசு தீவு

நான்கு தீவுகளில் கிங் தீவு மிகப்பெரிய பரப்பளவைக் கொண்டிருந்தாலும், கிங் தீவை விடச் சில நாட்களுக்கு முன்பு ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்டதால் இந்தக் குழுவிற்குப் புத்தாண்டு தீவு என்று பெயரிடப்பட்டுள்ளது.[2][3]:50–51

விலங்கினங்கள்

[தொகு]

இனப்பெருக்கம் செய்யும் கடற்பறவை மற்றும் கரையோரப் பறவை சிற்றினங்களில் சிறிய பென்குவின், குறுகிய வால் ஷியர்வாட்டர், பசிபிக் கடற்பறவை, வெள்ளி கடற்பறவை, கருப்பு வெள்ளை சிப்பி பிடிப்பான், மற்றும் கருமுக நீர்க்காகம் ஆகியவை அடங்கும். ஊர்வனவற்றில் புலி பாம்புகள் மற்றும் பல்லிகள் அடங்கும். ஒரு வகைச் சுண்டெலியும் கிறித்துமசு தீவில் காணப்படுகிறது.[3]:47–49

கடற்பறவைகள் மற்றும் கரையோரப் பறவைகளின் இனப்பெருக்கத்தில் இத்தீவு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.[4]

புவியியல்

[தொகு]

பன்னாட்டு நீர்ப்பரப்பு அமைப்பின் கூற்றுப்படி, பாசு குடாவினைப் பெரும் ஆத்திரேலிய பெருங்குடாவிலிருந்து பிரிக்கும் பிரிவு கிங் தீவு வழியாகச் செல்கிறது. எனவே கிறித்துமசு தீவு பெரும் ஆத்திரேலியன் பெருங்குடாவில் அமைந்துள்ளது.

கிறித்துமசு தீவை தாசுமேனியாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள சிறிய கிறித்துமசு தீவுடனோ அல்லது இந்தியப் பெருங்கடலில் உள்ள ஆத்திரேலிய வெளிப்புறக் கிறித்துமசு தீவுடன் குழப்பக்கூடாது.

புத்தாண்டு தீவு (மையம், வடக்கு) கிறிசுதுமசு தீவு (மைய, தெற்கு) மற்றும் கிங் தீவு (கீழே-வலது)

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Christmas Island (TAS)". Gazetteer of Australia online. Geoscience Australia, Australian Government.
  2. 2.0 2.1 "Travel: King Island". The Sydney Morning Herald. 8 February 2004. http://www.smh.com.au/news/Tasmania/King-Island/2005/02/17/1108500205826.html. 
  3. 3.0 3.1 3.2 Brothers, Nigel; Pemberton, David; Pryor, Helen; Halley, Vanessa (2001). Tasmania's Offshore Islands: seabirds and other natural features. Hobart: Tasmanian Museum and Art Gallery. ISBN 0-7246-4816-X.
  4. BirdLife International. (2011). Important Bird Areas factsheet: King Island. Downloaded from "BirdLife International – conserving the world's birds". Archived from the original on 10 July 2007. Retrieved 2013-05-07. on 2011-07-16.