உள்ளடக்கத்துக்குச் செல்

கிறித்தவ மெய்யியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிறித்தவ மெய்யியல் என்பது கிறித்தவ பாரம்பரியத்திலிருந்து வந்த சிறப்புக்களிலிருந்து வளர்ந்த மெய்யியல் ஆகும். இது ஆரம்ப கிறித்தவ காலத்தில் உருவாகி, பின்னர் பல கருத்துருவாக்கங்களுடன் வளர்ந்தது.[1]

ஆரம்பம்

[தொகு]

இயேசு நூல்களை எழுதினார் என்பதற்குச் சான்றுகள் இல்லை. அவரால் மெய்யியல் பற்றியோ அல்லது இறையியல் பற்றியோ எழுதினார் என்பதற்கும் சான்றுகள் இல்லை.

ஆனால், கிறிஸ்துவின் இறப்புடன் கிறித்தவ மெய்யியல் திருத்தூதர்களால் வளரத் தொடங்கியது. யூத உரோம குடிமகனான திருத்தூதர் பவுல் திருமுகங்களையும் மடல்களையும் ஆரம்ப கிறித்தவ திருச்சபைக்கு எழுதினார். இது போதனையாகவும் இறையியலாகவும் இருந்தது. சில இடங்களில், அவர் காலத்து பிரபல்யம் பெற்ற (குறைகூறல், ஐயவாதம், உறுதிப்பாட்டுவாதம்) மெய்யியலாளர்கள் போன்று செயற்பட்டார். திருத்தூதர் பணிகள் என்ற விவிலிய நூலில் பவுல் கிரேக்க மெய்யியலாளர்களுடன் நடத்திய உரையாடல் மற்றும் விவாதம் பற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது. இது திருமுகங்களிலும் பிரதிபலிக்கிறது. எ.கா: "போலி மெய்யியலாலும் வீணான ஏமாற்றுப் பேச்சாலும் உங்களை யாரும் கவர்ந்துகொள்ள விடாதீர்கள்."[2] அவருடைய திருமுகங்கள் பிற்கால கிறித்தவ மெய்யியலுக்கு குறிப்பிடத்தக்க மூலமாக மாறியது.

உசாத்துணை

[தொகு]
  1. "Christian Philosophy: The 1930s French Debates". பார்க்கப்பட்ட நாள் 6 சனவரி 2015.
  2. "கொலோசையருக்கு எழுதிய திருமுகம் (2:8)". பார்க்கப்பட்ட நாள் 6 சனவரி 2015.

வெளி இணைப்பு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறித்தவ_மெய்யியல்&oldid=4041037" இலிருந்து மீள்விக்கப்பட்டது