உள்ளடக்கத்துக்குச் செல்

கிருஷ்ணப்பட்டினம் துறைமுகம்

ஆள்கூறுகள்: 14°15′N 80°08′E / 14.250°N 80.133°E / 14.250; 80.133
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிருஷ்ணப்பட்டினத் துறைமுகம்
Krishnapatnam Port
Map
முழுத்திரை காட்சிக்கு வரைபடத்தில் கிளிக் செய்யவும்
அமைவிடம்
நாடுஇந்தியா இந்தியா
அமைவிடம்கிருஷ்ணப்பட்டினம்
விவரங்கள்
திறக்கப்பட்டது2008
நிர்வகிப்பாளர்கிருஷ்ணப்பட்டினம் துறைமுக நிறுவனம் (வரையறை.,)
உரிமையாளர்நவயுகா பொறியியல் நிறுவனம் (வரையறை.,)
நிறுத்தற் தளங்கள்12
புள்ளிவிவரங்கள்
ஆண்டு சரக்கு டன்னேஜ்40.72 மில்லியன் டன்கள் (2014-15)
ஆண்டு வருவாய்1800 கோடிகள் (2014-15)
வலைத்தளம்
http://www.krishnapatnam.com/

கிருஷ்ணப்பட்டினம் துறைமுகம் என்னும் துறைமுகம், இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்திலுள்ள நெல்லூர் மாவட்டத்தின் கிருஷ்ணப்பட்டினத்தில் உள்ளது. இந்த துறைமுகத்தை தனியார் நிறுவனத்தினர் கட்டி, நிர்வகிக்கின்றனர். இது சென்னைத் துறைமுகத்தில் இருந்து 190 கி.மீ வடக்கிலும், நெல்லூருக்கு 18 கி.மீ கிழக்கிலும் அமைந்துள்ளது.[1][2] இந்த துறைமுகத்தின் 92% சதவீத பங்குகளை ஐதராபாத்தைச் சேர்ந்த சி.வி.ஆர். குழுமத்தினர் வைத்துள்ளனர். லண்டனைச் சேர்ந்த 3ஐ குரூப் பி.எல்.சி என்னும் நிறுவனம் மீதி பங்குகளைக் கொண்டுள்ளது.[3]

பெயர்

[தொகு]

முற்காலத்தில் இங்கிருந்த துறைமுகத்தை விஜயநகரப் பேரரசின் கிருஷ்ண தேவராயர் இயக்கிவந்துள்ளார். அவர் நினைவாக இத்துறைமுகத்துக்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.[4]

அமைப்பு

[தொகு]

இது இந்தியாவிலேயே பெரிய தனியார் துறைமுகம் ஆகும். இதை 2008ஆம் ஆண்டின் ஜூலை பதினேழாம் நாளில் ஐ.மு.கூ தலைவரான சோனியா காந்தி திறந்துவைத்தார்.[5] இந்த துறைமுகம் 4,553 ஏக்கர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது.[6] இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, இந்த துறைமுகத்தில் கிடைக்கும் லாபத்தில் 2.6 சதவீத வருமானத்தை நிறுவனத்தினர் ஆந்திரப் பிரதேச அரசுக்கு வழங்க வேண்டும். முதல் முப்பது ஆண்டுகளுக்கு இந்நிலை தொடரும். பின்னர், 5.4 சதவீத வருமானத்தையும், 40வது வருடத்தில் இருந்து 10.8 சதவீத வருமானத்தையும் மாநில அரசுக்கு வழங்க வேண்டும்.[7]

திறன்

[தொகு]

2014ஆம் ஆண்டில் கணக்கிட்டபடி, இந்த துறைமுகத்தில் ஆண்டுதோறும் 75 மில்லியன் டன் பொருட்களை கையாள முடியும்.[3]

இணைப்புகள்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "Chennai port loses out to new facility". The Hindu. June 11, 2012. http://www.thehindu.com/business/chennai-port-loses-out-to-new-facility/article3512758.ece. பார்த்த நாள்: 22 November 2012. 
  2. "FOCUS: NELLORE DISTRICT". Frontline 30 (03). 9–22 February 2013. http://www.frontlineonnet.com/stories/20130222300310400.htm. பார்த்த நாள்: 17 February 2013. 
  3. 3.0 3.1 "New port plan raises viability concerns for Krishnapatnam". November 20, 2012. http://www.livemint.com/Companies/VdsFrYdVXQEE8EjB3Nbu6J/New-port-plan-raises-viability-concerns-for-Krishnapatnam-Po.html. பார்த்த நாள்: November 22, 2012. 
  4. "About The Port". Krishnapatnam Port. பார்க்கப்பட்ட நாள் 8 June 2015.
  5. "Andhra to get new port in Krishnapatnam". Economic Times. July 11, 2008. http://articles.economictimes.indiatimes.com/2008-07-11/news/27736625_1_krishnapatnam-port-navayuga-group-land-acquisition. பார்த்த நாள்: 22 November 2012. 
  6. "Krishnapatnam Port gets Rs4,000 cr for next phase". March 18, 2009. http://www.livemint.com/Politics/hHCz1aVX5qggS96BX9XElI/Krishnapatnam-Port-gets-Rs4000-cr-for-next-phase.html. பார்த்த நாள்: November 22, 2012. 
  7. "Krishnapatnam Port plans to set up car terminal by Jun 2013". பார்க்கப்பட்ட நாள் 22 November 2012.