உள்ளடக்கத்துக்குச் செல்

கிருஷ்ணன்குட்டி பொதுவாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலைமண்டலம் கிருஷ்ணன்குட்டி பொதுவாள்(1924-1992) கேரளாவின் பாரம்பரிய நடனமான கதகளியில் இசைக்கப்படும் தாள வாத்தியமான செண்டைக்கலையை சுயமாக கற்றுக்கொண்ட இசைக்கலைங்கராவார், [1]

தென்னிந்தியாவில் கேரளாவின் பாரம்பரிய நடன நாடகத்திற்கான இசைத்துணையாக அதன் அழகியலை மறுவரையறை செய்து செண்டை வாசிக்கும் கலையில் சிறந்து விளங்கியுள்ள இவர் "செண்டை இல்லாத கதகளி அலைகள் இல்லாத கடல் போன்றது" என்று இதன் முக்கியத்துவத்தை பற்றி கூறியுள்ளார்.

பிறப்பு

[தொகு]

பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வெள்ளிநெழியில் உள்ள கதகளி பெருமை கொண்ட கிராமத்தில் பிறந்த கிருஷ்ணன்குட்டி, இக்கலையில் பழம்பெரும் மூத்தவரான கேசவன் நம்பூதிரி மற்றும் பட்டிக்கம்தோடி இராவுன்னி மேனன் ஆகியோரிடம் தனது செண்டை வாசிப்பை பயின்றுள்ளார். அதற்கு முன்னதாக சம்ரங்குளங்கரா அப்பு மாராரிடம் இதன் அடிப்படைப் பயிற்சியையும் பெற்றுள்ளார். [2]

கதகளி ஆடப்படும்போது வரும் உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு செண்டை இசையில் அதற்கு தேவைப்படும் உணர்ச்சிகளை இணைக்கக்கூடிய பெருமை இவருக்கு இருந்துள்ளது. இவரும், மறைந்த மத்தளம் வித்தகர் கலாமண்டலம் அப்புக்குட்டி பொதுவாளும் இணைந்து, இசைக்கப்படும் கதகளி இசைக்கோர்வையானது இவர்களுக்கு பார்வையாளர்களிடமிருந்து பரவலான பாராட்டைப் பெற்றுக்கொடுத்துள்ளது. இவ்விருவரும் சேர்ந்து, புகழ்பெற்ற கதகளி ஆட்டக்கலைங்கரான பத்ம பூசண் இராமன்குட்டி நாயரின் ஆட்டத்திற்க்கு இசையமைத்து பெருமை சேர்த்துள்ளனர்.

விருதுகள்

[தொகு]

ஆகிய விருதுகளை வென்றுள்ள கிருஷ்ணன்குட்டி , கேரளா கலாமண்டலத்தில் இவரின் வழி பல சீடர்களை வளர்த்து, 1980களின் பிற்பகுதியில் பேராசிரியராக ஓய்வு பெற்றுள்ளார். இவரது சீடர்களில் ஆயம்குடி குட்டப்பா மாரார், கலமண்டலம் கிருஷ்ணதாஸ், கலாமண்டலம் கேசவன், மறைந்த கலாமண்டலம் கேசவன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

கதகளியின் முழுமையான புரிதலைக் கொண்டிருந்த இவரால் அந்த ஆட்டத்தின் எந்தவொரு காட்சியிலும் அதனோடு செண்டை இசையை ஒருங்கிணைக்க உதவியுள்ளது. இவரது இசையின் அழகியல் புதுமைகள், கதகளியை அதன் செவ்வியல் தூய்மையை மாற்றாமல் மேலும் வளப்படுத்தியுள்ளது. கொந்தளிப்பு, சந்தேகம், வேதனை, மகிழ்ச்சி மற்றும் பிற அனைத்து உணர்வுகளையும் / வெளிப்பாடுகளையும் கதகளி நாடகத்தில் உள்வாங்கி தனது செண்டா இசையின் மூலம் மாற்றியுள்ளாடர் அவரால் முடிந்தது.

பிற பங்களிப்புகள்

[தொகு]

பீஷ்மபிரதிக்ஞை, அம்பா, ஸ்னபகாசரிதம் ஆகியவை இவரது புகழ்பெற்ற செண்டா இசையில் வெளிவந்த கதகளி நாடகங்களாகும், இவர் அஷ்டபதியாட்டம் என்ற நடன நாடக வடிவத்தையும் மீண்டும் உருவாக்கியுள்ளார். செண்டை இசையுடன் தன்னை மட்டுப்படுத்திக் கொள்ளாமல், பல கதகளி நாடகங்களை எழுதுவதைத் தவிர கதகளியாட்ட பாத்திரங்களிலும் நடித்துள்ளார். [5]

இசை மேதையான கிருஷ்ணன்குட்டி, கேரள கலைமண்டலத்தின் அதிகாரிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து பலமுறை கலைமண்டலத்தை விட்டு வெளியேறினாலும் காந்தி சேவா சதன் கதகளி அகாடமியிலும் பணியாற்றியுள்ளார்.

இறப்பு

[தொகு]

அவரது உடலில் ஏற்பட்ட கடுமையான கல்லீரல் பிரச்சனையால் எர்ணாகுளம் மருத்துவமனையில் 1992 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி கிருஷ்ணன்குட்டி இறந்தார்.

மே 2008 ஆம் ஆண்டில், கலைமண்டலம் கிருஷ்ணன்குட்டி பொதுவாளின் முழுமையான எழுத்துப் படைப்புகளைத் தாங்கிய "மேலப்பெருக்கம்" என்ற புத்தகத்தை அவரது மகன் வெளியிட்டுள்ளார்.

பொடுவாளின் இரண்டு மகன்களுமே கதகளி துறையில் கலைஞர்களாக உள்ளனர். கலாமண்டலம் மோகனகிருஷ்ணன் ஒரு இசைக்கலைஞர், அதே சமயம் கலமண்டலம் விஜயகிருஷ்ணன் தந்தையைப் போலவேவ்ஒரு செண்டா வாசிப்பவராவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ice3bet: Tips Memilih Permainan Slot yang Tepat". 12 December 2007.
  2. Kathakali Vijnanakosam (encyclopedia), page 333
  3. "Kerala Sangeetha Nataka Akademi Award: Kathakali". Department of Cultural Affairs, Government of Kerala. பார்க்கப்பட்ட நாள் 26 February 2023.
  4. "Kerala Sangeetha Nataka Akademi Fellowship: Kathakali". Department of Cultural Affairs, Government of Kerala. பார்க்கப்பட்ட நாள் 25 February 2023.
  5. Mariya, Merin (2018-10-12). "கதகளிக்காக வாழ்ந்த கலாமண்டலம் கிருஷ்ணன்குட்டி பொதுவாள் மனிதரை நினைவு கூர்தல்". The New Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-18.