கிரிஜா வைத்தியநாதன்
கிரிஜா வைத்தியநாதன் | |
---|---|
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் | |
பதவியில் 22 டிசம்பர் 2016 – 30 சூலை 2019 | |
முன்னையவர் | பி. ராமமோகன ராவ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சூலை 1, 1951 தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
துணைவர் | வைத்தியநாதன் |
பெற்றோர் | ச. வெங்கிடரமணன் |
உறவினர் | எஸ். வி. சேகர் |
வாழிடம்(s) | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
கல்வி | இ. ஆ. ப |
இணையத்தளம் | தமிழ்நாடு தலைமை செயலகம் |
கிரிஜா வைத்தியநாதன் (Girija Vaidyanathan, பிறப்பு:1 சூலை 1959) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். 1981-ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான இவர், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளராக பணியாற்றியவர்.
வாழ்க்கை குறிப்புகள்
[தொகு]இவரது தந்தை ச. வெங்கிடரமணன் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக (1990 - 1992) இருந்தவர்.[1]
இவர் பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான எஸ். வி. சேகரின் மைத்துனியாவார்.[2][3]
கல்வி
[தொகு]இயற்பியலில் முதுநிலை படிப்பும், நல வாழ்வு பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர்.
1981 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி தேர்வில் பெண்களில் முதல் இடத்தையும், தேர்வுக்குத் தோற்றிய ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களில் ஒன்பதாவது இடத்தையும் பெற்றார்.[3]
அரசுப் பணிகள்
[தொகு]2011-இல் சுகாதாரச் செயலராக இருந்த கிரிஜா வைத்தியநாதன், ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தை புதிதாக வடிவமைத்தவர். மேலும் தமிழ்நாட்டின் நிதித்துறை, பள்ளிக் கல்வித் துறை, நில நிர்வாகத் துறை, சுகாதாரத்துறை, வேளாண்மைத் துறைகளில் பணியாற்றியவர்.
2016-இல் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி வகித்து வந்த கிரிஜா வைத்தியநாதன், நில நிர்வாகம் மற்றும் வருவாய் துறை ஆணையராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.
தலைமைச் செயலர் பதவியில்
[தொகு]தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலராக 22 டிசம்பர் 2016 அன்று தமிழக ஆளுநரால் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டு , 2019 வரை அப்பதவியயை வகித்தார் .நிர்வாக சீர்திருத்தம், கண்காணிப்பு ஆணையர் ஆகிய பதவிகள் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டன.[4][5]
இவர் தமிழ் நாட்டின் 45 ஆவது தலைமைச் செயலராவார் என்பதுடன் நான்காவது பெண் தலைமைச் செயலருமாவார். இதற்கு முன்னர் லட்சுமி பிரானேஷ், எஸ். மாலதி, ஷீலா பாலகிருஷ்ணன் ஆகிய பெண்கள் தலைமைச் செயலர்களாகப் பணியாற்றியுள்ளனர்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "AIADMK's pick of no-nonsense Girija Vaidhyanathan as Chief Secretary surprises many". இந்தியன் எக்ஸ்பிரஸ். 23 டிசம்பர் 2016. Archived from the original on 23 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 23 டிசம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
,|date=
, and|archivedate=
(help) - ↑ "What led to the appointment of Girija Vaidyanathan as TN chief secretary?". oneindia.com. 22 டிசம்பர் 2016. Archived from the original on 23 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 23 டிசம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
,|date=
, and|archivedate=
(help) - ↑ 3.0 3.1 3.2 "Chennai-born Girija is new chief secretary". டைம்ஸ் ஆஃப் இந்தியா. 23 டிசம்பர் 2016. Archived from the original on 2016-12-23. பார்க்கப்பட்ட நாள் 23 டிசம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "Girija Vaidyanathan is new TN Chief Secretary, Rama Mohana Rao sacked". டெக்கான் க்ரானிக்கிள். 22 டிசம்பர் 2016. Archived from the original on 22 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 23 டிசம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
,|date=
, and|archivedate=
(help) - ↑ Girija Vaidyanathan appointed Chief Secretary of Tamil Nadu