உள்ளடக்கத்துக்குச் செல்

கிரிகாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகவரியட்டை ஃகெட்கிரிகாமி (hetkirigami)

கிரிகாமி (切り紙?) என்பது தாளிலோ அட்டையிலோ செய்யும் ஒரிகாமி என்னும் மடிப்புருவக் கலையின் ஒரு வேறுபாடு. சப்பானிய மொழியில் கிரு என்றால் 'வெட்டு' காமி என்றால் தாள் அல்லது மடல், ஆகவே வெறும் மடிப்புகளால் மட்டுமே உருவாக்கும் ஒரிகாமியில் இருந்து வேறுபட்டு வெட்டப்படுவதும் சேர்ந்த கலை. இக்கலையை கிரியே (切り絵) என்றும் அழைக்கின்றார்கள் . கிரு = வெட்டு, ஏ = படம்.

பொதுவாக கிரிகாமி செய்ய தக்கவாறு மடிக்கப்பட்ட ஒன்றில் தொடங்கும். பிறகு அதனை முறைப்படி வெட்டிப் பிரிப்பதால் கிரிகாமி உருவம் வெளிப்படும். கிரிகாமி பெரும்பாலும் ஒற்றொருமை அல்லது நேர்பு (symmetry) என்னும் தன்மை கொண்டதாக இருக்கும். நுரைபனி படிகத்தைப் போலவோ பல ஒரேமாதிரி பல இதழ்கள் கொண்டபூக்களைப்போலவோ நேர்புத்தன்மை கொண்டதாக இருக்கும்.

கிரிகாமி பெருமாலும் ஒரே தாளை மடித்தும் வெட்டியும் செய்யப்படுவது. பல பகுதிகளைத் தனித்தனியாக ஒட்டிச்செய்வதன்று.

மோன் கிரி என்பது தாளை வெட்டும் கலை.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிகாமி&oldid=3290262" இலிருந்து மீள்விக்கப்பட்டது