உள்ளடக்கத்துக்குச் செல்

கிராம்மட்டோபைலம் ஸ்பிசியோசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிராம்மட்டோபைலம் ஸ்பிசியோசம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
சிற்றினம்:
துணை சிற்றினம்:
பேரினம்:
இனம்:
G. speciosum
இருசொற் பெயரீடு
Grammatophyllum speciosum
Blume[1]
வேறு பெயர்கள் [2]
  • Grammatophyllum fastuosum Lindl.
  • Grammatophyllum giganteum Blume ex Rchb.f.
  • Grammatophyllum macranthum (Wight) Rchb.f.
  • Pattonia macrantha Wight

கிராம்மட்டோபைலம் ஸ்பிசியோசம் (Grammatophyllum Speciosum) என்பது லாவோஸ், மியான்மர், தாய்லாந்து, வியட்நாம், போர்னியோ, இந்தோனேசியா (சுமத்ரா, ஜாவா, சுலாவேசி) மற்றும் மலேசியா ஆகியோரை பூர்வீகமாகக் கொண்ட ஆர்க்கிட் தாவர இனமாகும். இது பிலிப்பைன்ஸ், நியூ கினியா, சாலமன் தீவுகளிலும் காணப்படுவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தால் உலகின் மிக உயரமான ஆர்க்கிட் என பட்டியலிடப்பட்டுள்ளது, இதன் மாதிரிகள் 7.62 மீட்டர் (25 அடி) உயரம் வரை பதிவு உள்ளது செய்யப்பட்டுள்ளன.[3]

விளக்கம்

[தொகு]

தாவரக் குடும்பங்களில் மிகப் பெரிய குடும்பம் ஆர்க்கிடேசியீ குடும்பம் ஆகும். இக்குடும்பத்தில் 30,000 இனச் செடிகள் உள்ளன. இவற்றில் மிகப்பெரிய செடி இது ஆகும். இது மரங்கள் மீது தொற்றுச் செடிகளாக வளர்கின்றது. இவற்றின் அடிப்பகுதியில் பொய்க் கிழங்கு உள்ளன. இதனுடைய தண்டு 6-10 அடி உயரம் வளரக்கூடியது. இலைகள் 1-2 அடி நீளத்திற்க தண்டில் இரண்டு வாரிசையில் உள்ளன. பூங்கொத்து 8 அடி நீளத்திலும், சுமார்; 70 முதல் 100 பூக்கள் கொண்டும் உள்ளது. இதனுடைய பூக்கள் பெரியதாகவும், மஞ்சள் மற்றும் சிவப்பு கருஞ்சிவப்பு புள்ளிகளுடன் இருக்கும். இவ்வினத்தில் 8 சாதிகள் உள்ளன. இச்செடி ஜாவா, மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் வளர்கிறது. ஜாவாவில் உள்ள மரத்தில் 18 அடி சுற்றி இச்செடி தொற்றி படர்ந்து வளர்ந்துள்ளது. மரத்தில் 8 அடி நீளத்திற்கு வேர்கள் ஒட்டி உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Grammatophyllum speciosum". World Checklist of Selected Plant Families. ராயல் தாவரவியல் பூங்கா, கியூ. பார்க்கப்பட்ட நாள் 2 Oct 2016 – via The Plant List.
  2. "Grammatophyllum speciosum (synonyms)". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி (WCSP). ராயல் தாவரவியல் பூங்கா, கியூ. பார்க்கப்பட்ட நாள் 2 Oct 2016.
  3. Young, Mark C., ed. (1955). Guinness Book of World Records 1997. Guinness Publishing Ltd. pp. 42. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9652383-0-X.

வெளி இணைப்புகள்

[தொகு]

பொதுவகத்தில் Grammatophyllum speciosum பற்றிய ஊடகங்கள்