உள்ளடக்கத்துக்குச் செல்

கிராமப்புற வீட்டுக் குடிநீர் வழங்கும் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹர் ஹர் ஜல்
படிமம்:Har Ghar Jal (Jal Jeevan Mission) logo.jpg
துறை மேலோட்டம்
அமைப்பு2019
மூல நிறுவனம்ஜல் ஜீவன் மிஷன்
மூல அமைப்புஜல் சக்தி அமைச்சகம்
வலைத்தளம்https://jaljeevanmission.gov.in/

கிராமப்புற வீட்டுக்குடிநீர் வழங்கும் திட்டம் அல்லது ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், இந்திய அரசு 2024 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தனிப்பட்ட வீட்டு குழாய் இணைப்புகள் மூலம் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனுடன் சாம்பல் நீர் மேலாண்மை, நீர் சேமிப்பு, மழை நீர் சேகரிப்பு மூலம் மறுசுழற்சி செய்தல் மற்றும் மறுபயன்பாடு போன்ற கட்டாயக் கூறுகளாக தொடர்ந்து நீர் வழங்குவதற்கான ஆதார நிலைத்தன்மை நடவடிக்கைகளை இந்த திட்டம் செயல்படுத்தும்.[1]

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 2019 ஆகத்து 15 அன்று சுதந்திர தின விழா உரையின்பொழுது, 2024க்குள் இந்தியா முழுவதுமுள்ள கிராம்ப்புற வீடுகளுக்கு 3.60இலட்சம் கோடி வரவுசெலவு திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்கும் குறிக்கோள் குறித்து உரையாற்றினார். இதில் மத்திய அரசின் பங்கு 2.08இலட்சம் கோடி ஆகும்..[2] ந்துதிட்டத்தில்்் மத்திய அரசு-யூனியன்பிரதேசம் இடையே 100:0 விகிதாச்சாரத்திலும், மத்திய அரசு -வடகிழக்கு மாநிலங்கள்/இமயமலை மாநில அரசுகள் இடையே 90:10% விகிதாச்சாரத்திலும், மத்திய அரசு - மற்ற மாநில அரசுக்கிடையே 50:50% விகிதாச்சாரத்திலும் செலவினை பகிர்ந்துகொள்ள நிர்ணயிக்கப்பட்டது.[3]

வரலாறு

[தொகு]

1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட "துரிதப்படுத்தப்பட்ட கிராமப்புற குடிநீர் வழங்கும் திட்டத்தின்" கீழ் கிராமப்புற நீர் விநியோகத்திற்காக மத்திய அரசின் உதவி மாநிலங்களுக்கு தொடங்கியது.[4][5]

2009ம் ஆண்டு இந்த திட்டம் "தேசிய கிராமப்புற குடிநீர்"(NRDWP) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது, இது மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து பங்கேற்கும் திட்டமாக மாற்றப்பட்டது. NRDWP இன் நோக்கங்களில் ஒன்று "அனைத்து வீடுகளும் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீரை முடிந்தவரை அணுகவும், ஐக்கிய நாடு அமைப்புகளுடன் இணைந்து 2030 ஆம் ஆண்டளவில் இலக்கை அடைய முன்மொழியப்பட்டது.[6]

ஆனால் இப்போது, ​​ஜல் ஜீவன் மிஷன் (ஜேஜேஎம்) மூலம் 2024 ஆம் ஆண்டுக்குள் இலக்கை அடைய திட்டமிடப்பட்டுள்ளது. DDWS இல் உள்ள தகவலின்படி, 31.3.2019 நிலவரப்படி, கிராமப்புற குடும்பங்களில் 18.33% மட்டுமே, அதாவது, நாட்டில் மொத்தமுள்ள 17.87 கோடி கிராமப்புற குடும்பங்களில் 3.27 கோடி குடும்பங்கள் மட்டுமே குழாய் நீர் இணைப்பு பெற்றுள்ளன.

தாக்கம் & விளைவுகள்

[தொகு]
  • கிராமப்புற இந்தியா இப்போது தண்ணீர் எடுப்பதில் நாளொன்றுக்கு 5.5 கோடி மணிநேரங்களைச் சேமித்து வருகிறது, குறிப்பாக பெண்களிடமிருந்து தொழிலாளர் பங்கேற்பையும் உற்பத்தித்திறனையும் அதிகரிக்கச் செய்கிறது.[7][8]
  • நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பாதுகாப்பான முறையில் நிர்வகிக்கப்படும் குடிநீர் திட்டத்தின் காரணமாக, வயிற்றுப்போக்கு நோய்களால் ஏற்படும் கிட்டத்தட்ட 400,000 இறப்புகளைத் தடுக்கப்படுகின்றது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகின்றது.[9][10]
  • அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதன் மூலம் சுமார் 1.36 லட்சம் குழந்தைகளின் இறப்புகளைத் தடுக்க முடியும்.[11]

புள்ளிவிவரம்

[தொகு]
மாநிலம் மொத்தவீடுகள் 2022 ஆகத்து 11 அன்று குடிநீர் இணைப்பு பெற்றவீடுகள் 2019 ஆகத்து 15% 2022 ஆகத்து 11 அன்று % 100% இலக்கு அடைய நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு
1 கோவா 2,63,013 2,63,013 75.697 100.00 2021
2 தெலுங்கானா 53,86,962 53,86,962 29.113 100.00 2021
3 அ&நி. தீவுகள் 62,037 62,037 46.016 100.00 2024
4 புதுச்சேரி 1,14,908 1,14,908 100.00 2021
5 டாமன் டையூ 85,156 85,156 100.00
6 அரியானா 30,96,792 30,96,792 57.038 100.00 2023
7 பஞ்சாப் 34,40,065 34,37,781 48.794 99.93 2022
8 குசராத் 91,77,459 88,93,308 71.003 96.90 2023
9 பீகார் 1,66,96,426 1,59,41,495 1.895 95.48 2021
10 இமாச்சல் பிரதேசம் 17,27,518 16,38,361 44.151 94.84 2023
11 மணிப்பூர் 4,51,566 3,28,215 5.740 72.68 2022
12 மகாராட்டிரம் 1,45,69,898 1,02,74,001 33.245 70.52 2024
13 சிக்கிம் 1,31,880 90,722 53.340 68.79 2022
14 அருணாச்சல் பிரதேசம் 2,20,323 1,48,509 10.347 67.41 2023
15 மிசோரம் 1,34,028 87,634 6.865 65.38 2023
16 உத்திரகாண்ட் 14,94,418 9,66,347 8.721 64.66 2022
17 ஆந்திரபிரதேசம் 95,69,202 58,43,813 32.127 61.07 2024
18 சம்முகாசுமீர் 18,35,190 10,62,682 31.357 57.91 2023
19 கருநாடகம் 1,01,18,270 54,20,296 24.226 53.57 2023
20 திரிபுரா 7,41,945 3,92,655 3.302 52.92 2023
21 தமிழ்நாடு 1,24,82,920 65,21,456 17.432 52.24 2023
22 லடாக் 42,757 21,882 3.307 51.18 2022
23 ஒடிசா 88,57,396 44,62,044 3.510 50.38 2024
24 நாகலாந்து 3,77,286 1,76,944 3.679 46.90 2024
25 மத்தியபிரதேசம் 1,20,08,025 51,67,767 11.269 43.04 2024
26 கேரளம் 70,68,652 29,96,743 23.542 42.39 2023
27 மேகலயா 6,30,258 2,47,298 0.722 39.24 2023
28 அசாம் 65,49,090 24,51,232 1.700 37.43 2024
29 மேற்கு வங்காளம் 1,60,01,698 46,28,725 1.341 28.93 2024
30 சத்தீசுகர் 50,06,062 13,29,757 6.387 26.56 2024
31 இராச்சுத்தான் 1,05,68,805 27,85,086 11.109 26.35
32 ஜார்கண்ட் 61,21,549 13,54,486 5.639 22.13 2024
33 உத்திரப்பிரதேசம் 2,64,27,705 41,34,675 1.953 15.65 2022
34 மொத்தம் 19,14,59,259 9,98,12,782 16.90 52.13 2024

03 செப் 2023 அன்றைய நிலவரப்படி[12]:

மாநிலம் மொத்தவீடுகள் 2023 செப் 03 அன்று குடிநீர் இணைப்பு பெற்றவீடுகள் 2019 ஆகத்து 15% 2023 செப் 03 அன்று % 100% இலக்கு அடைய நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு
1 கோவா 2,63,013 2,63,013 75.697 100.00 2021
2 தெலுங்கானா 53,86,962 53,86,962 29.113 100.00 2021
3 அ&நி. தீவுகள் 62,037 62,037 46.016 100.00 2024
4 புதுச்சேரி 1,14,969 1,14,969 100.00 2021
5 டாமன் டையூ 85,156 85,156 100.00
6 அரியானா 30,41,314 30,41,314 57.038 100.00 2023
7 குசராத் 91,18,449 91,18,449 71.003 100.00 2023
8 பஞ்சாப் 34,25,723 34,25,723 48.794 100.00 2022
9 இமாச்சல் பிரதேசம் 17,08,727 16,08,727 44.151 100.00 2023
10 பீகார் 1,66,30,175 1,60,30,353 1.895 96.39 2021
11 மிசோரம் 1,33,060 1,22,516 6.865 92.088 2023
12 அருணாச்சல் பிரதேசம் 2,30,138 2,04,306 10.347 88.78 2023
13 சிக்கிம் 1,31,880 1,14,837 53.340 87.08 2022
14 லடாக் 42,482 35,353 3.307 83.22 2022
15 உத்திரகாண்ட் 14,92,407 12,08,491 8.721 80.98 2022
16 மகாராட்டிரம் 1,46,73,136 1,16,11,238 33.245 79.13 2024
17 நாகலாந்து 3,69,204 2,86,621 3.679 77.63 2024
18 மணிப்பூர் 4,51,566 3,47,368 5.740 76.93 2022
19 தமிழ்நாடு 1,25,49,351 91,63,609 17.432 73.02 2023
20 ஆந்திரபிரதேசம் 95,54,841 67,14,878 32.127 70.28 2024
21 சம்முகாசுமீர் 18,67,940 12,90,469 31.357 69.09 2023
22 கருநாடகம் 1,01,16,802 69,87,335 24.226 69.07 2023
23 திரிபுரா 7,44,514 5,07,200 3.302 68.12 2023
24 ஒடிசா 88,62,636 56,71,022 3.510 63.99 2024
25 உத்திரப்பிரதேசம் 2,62,60,006 1,56,40,605 1.953 59.56 2022
26 சத்தீசுகர் 49,92,762 29,17,656 6.387 58.44 2024
27 மத்தியபிரதேசம் 1,12,33,044 64,83,009 11.269 57.71 2024
28 மேகலயா 6,51,566 3,71,886 0.722 57.08 2023
29 அசாம் 68,53,225 37,67,950 1.700 54.98 2024
30 கேரளம் 70,81,714 35,75,426 23.542 50.49 2023
31 இராச்சுத்தான் 1,06,65,441 46,15,786 11.109 43.28
32 ஜார்கண்ட் 61,44,104 25,27,969 5.639 41.14 2024
33 மேற்கு வங்காளம் 1,73,49,036 65,18,630 1.341 37.57 2024
34 இலட்சத்தீவுகள் 13370 1382 10.34
35 மொத்தம் 19,23,12,219 12,99,33,502 16.90 67.56 2024

அக்டோபர்


11 அக்டோபர் 2024 அன்றைய நிலவரப்படி[13]:

மாநிலம் மொத்தவீடுகள் 2024 அக்டோ 11 அன்று குடிநீர் இணைப்பு பெற்றவீடுகள் 2019 ஆகத்து 15% 2024 அக்டோ 11 அன்று % 100% இலக்கு அடைய நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு
1 கோவா 2,63,013 2,63,013 75.697 100.00 2021
2 தெலுங்கானா 53,86,962 53,86,962 29.113 100.00 2021
3 அ&நி. தீவுகள் 62,037 62,037 46.016 100.00 2024
4 புதுச்சேரி 1,14,969 1,14,969 100.00 2021
5 டாமன் டையூ 85,156 85,156 100.00
6 அரியானா 30,41,314 30,41,314 57.038 100.00 2023
7 குசராத் 91,18,449 91,18,449 71.003 100.00 2023
8 பஞ்சாப் 34,25,723 34,25,723 48.794 100.00 2022
9 இமாச்சல் பிரதேசம் 17,08,727 16,08,727 44.151 100.00 2023
10 அருணாச்சல் பிரதேசம் 2,28,566 2,28,566 10.347 100.00 2023
11 மிசோரம் 1,33,060 1,33,060 6.865 100.00 2023
12 உத்திரகாண்ட் 14,53,270 14,00,113 8.721 96.34 2022
13 பீகார் 1,66,91,779 1,60,35,717 1.895 96.07 2021
14 லடாக் 40,775 38,834 3.307 95.24 2022
15 நாகலாந்து 3,63,461 3,35,212 3.679 92.23 2024
16 இலட்சத்தீவுகள் 13370 12139 90.79
17 சிக்கிம் 1,32,827 1,19,228 53.340 89.76 2022
18 தமிழ்நாடு 1,25,27,139 1,09,05,147 17.432 87.05 2023
19 மகாராட்டிரம் 1,46,80,873 1,27,50,217 33.245 86.85 2024
20 உத்திரப்பிரதேசம் 2,66,27,312 2,27,36,662 1.953 85.39 2022
21 திரிபுரா 7,50,162 6,28,518 3.302 83.78 2023
22 அசாம் 71,87,551 58,36,235 1.700 81.20 2024
23 மேகலயா 6,50,914 5,25,808 0.722 80.78 2023
24 சம்முகாசுமீர் 19,25,180 15,45,813 31.357 80.29 2023
25 கருநாடகம் 1,01,28,627 80,76,778 24.226 79.74 2023
26 மணிப்பூர் 4,51,619 3,59,420 5.740 79.58 2022
27 சத்தீசுகர் 50,04,707 39,54,348 6.387 79.01 2024
28 ஒடிசா 88,67,433 66,59,872 3.510 75.10 2024
29 ஆந்திரபிரதேசம் 95,53,001 70,19,859 32.127 73.48 2024
30 மத்தியபிரதேசம் 1,11,81,915 73,26,042 11.269 65.52 2024
31 ஜார்கண்ட் 62,52,288 34,03,915 5.639 54.44 2024
32 கேரளம் 70,80,586 38,09,551 23.542 53.80 2023
33 இராச்சுத்தான் 1,07,25,003 57,43,286 11.109 53.55
34 மேற்கு வங்காளம் 1,75,22,973 92,56,428 1.341 52.82 2024
35 மொத்தம் 19,33,89,768 15,20,56,145 16.90 78.63 2024

சான்றுகள்

[தொகு]
  1. https://jaljeevanmission.gov.in/
  2. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1807827
  3. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1807827
  4. https://jalshakti-ddws.gov.in/sites/default/files/JJM_note.pdf
  5. https://www.joghr.org/article/92160-water-as-a-social-determinant-of-health-bringing-policies-into-action
  6. https://www.thehindubusinessline.com/data-stories/data-focus/jal-jeevan-mission-less-than-half-of-rural-households-have-access-to-piped-water-supply/article65186436.ece
  7. https://economictimes.indiatimes.com/news/india/river-linking-projects-helping-water-reach-more-households-talks-on-with-more-states-c-r-patil/articleshow/117555873.cms?from=mdr
  8. https://www.indiatoday.in/magazine/cover-story/75-years-of-the-republic/story/20250203-drinking-water-no-more-a-pipe-dream-75-years-of-the-republic-2669471-2025-01-24
  9. https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2042989
  10. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2095791
  11. https://jaljeevanmission.gov.in/sites/default/files/2023-07/potential-reduction-in-child-mortality-through-expanding-access-to-safe-drinking-water-in-india.pdf
  12. https://kurinjinet.blogspot.com/2023/09/3-2023_3.html
  13. https://kurinjinet.blogspot.com/2024/10/11-2024.html