கிடசாடோ சிபாசாபுரோ
கிடசாடோ சிபாசாபுரோ | |
---|---|
பிரபு கிடசாடோ சிபாசாபுரோ | |
பிறப்பு | ஓகுனி, குமமோடோ, சப்பான் | சனவரி 29, 1853
இறப்பு | சூன் 13, 1931 தோக்கியோ, சப்பான் | (அகவை 78)
தேசியம் | சப்பான் |
துறை | நுண்ணுயிரியலாளர் |
பணியிடங்கள் | டோக்கியோ இம்பீரியல் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | அரையாப்பு பிளேக்கு |
தாக்கம் செலுத்தியோர் | ராபர்ட் கோக் |
பிரபு கிடசாடோ சிபாசாபுரோ (北里 柴三郎? சனவரி 29, 1853 – சூன் 13, 1931) போருக்கு முந்தையக் காலத்து சப்பானிய மருத்துவரும் நுண்ணுயிரியலாளரும் ஆவார். 1984இல் ஆங்காங்கில் அரையாப்பு பிளேக்குக்கு காரணமான பாக்டீரியாவைக் கண்டறிந்த இருவரில் ஒருவராக பெரிதும் அறியப்படுகிறார். ஒரேநேரத்தில் அலெக்சாண்டர் எர்சினும் சிபாசாபுரோவும் நோய்க்காரணியான எர்சினியா பெசுட்டிசு கோலுயிரியை அடையாளம் கண்டனர்.
இளமையும் கல்வியும்
[தொகு]கிடசாடோ கியூஷூவிலுள்ள குமமோடோவின் ஓகுனி சிற்றூரில் பிறந்தவர். குமமோடோ மருத்துவப் பள்ளியிலும் டோக்கியோ இம்பீரியல் பல்கலைகழகத்திலும் மருத்துவக் கல்வி பெற்றார்.
1885 முதல் 1891 வரை பெர்லின் பல்கலைக்கழத்தில் மரு. ராபர்ட் கோக் வழிகாட்டலில் முனைவர் படிப்பு முடித்தார். 1889இல் இசிவு நோய் கோலுயிரியை தூய்மையான இழைய வளர்ப்பு மூலம் வளர்த்த முதல் நபர் இவராகும். 1890இல் இந்தத் தூய்மையான இழைய வளர்ப்பைப் பயன்படுத்தி எமில் ஃபோன் பெரிங்கு இசிவு நோய்க்கு நீர்ப்பாய சிகிச்சை உருவாக்க உதவினார்.