காளி பெயின்
Appearance
காளி பெயின் (Kali Bein) இந்திய பஞ்சாபில் உள்ள ஒரு சிற்றோடை. இது பியாஸ் ஆறும் சத்லஜ் ஆறும் சேருமிடத்தில் அவற்றுடன் கலக்கிறது. காளி பெயினில் குளித்த பின்னர் குரு நானக் ஞானமுக்தி பெற்றதாக நம்பப்படுகிறது. இந்தியாவின் பசுமைப் புரட்சியின் விளைவாக மாசடைந்த காளி பெயின், 2000 களில் பல்பீர் சிங் சீச்செவாலின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட பெருமுயற்சியால் சுத்தமாக்கப்பட்டு புத்துயிர்ப்பு பெற்றது.