காளாமுகர்
காளாமுகர்கள் என்றவர்கள் சாக்தம் மதத்தில் ஒரு பிரிவினரான காபாலிகம் என்ற மதத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் நரபலி, தன்னுருப்பு நீக்கல், மந்திர தந்திர வித்தைகள் போன்றவற்றை நம்புபவர்கள். இவர்கள் காளி, பைரவர் போன்ற தெய்வங்களை வழிபடுபவர்கள். இக்காபாலிகர்கள் இடைக்கால மற்றும் பிற்கால சோழர் காலங்களில் சோழர் தேசங்களில் குறிப்பிட்ட காட்டுப்பகுதிகளில் அதிகம் வாழ்ந்தனர்.
- தோற்றம்
இவர்கள் நல்ல திடகாத்திரமான உடம்பினையும், கையில் மந்திரக்கோலையும், மண்டையோட்டு மாலையையும், மிருகத்தோல் அல்லது அங்கியும் அணிந்து காணப்படுவர்.
- பலியிடுதல்
காளி என்ற தெய்வத்திற்கு மனிதபலி இடுவதன் மூலம் பல வரங்கள் பெற முடியும் என்பது இவர்களின் நம்பிக்கை. அரச வம்சத்தைச் சேர்ந்தவர்களைப் பலியிடுவதன் மூலம் மிகப்பெரிய சக்திகளைப் பெற முடியும் என்று நம்புபவர்கள் இவர்கள். பலியிடுதலுக்கென பலிபீடமும் மனிதர்களை மடக்கிப்பிடிக்க தனி ஆயுதங்களையும் இவர்கள் வைத்திருப்பர்.