கால்சியம் (மென்பொருள்)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. (October 2014) |
கால்சியம் 2.0 | |
உருவாக்குனர் | கார்ஸ்டன் நைஹாஸ் |
---|---|
அண்மை வெளியீடு | 2.3 / ஆகத்து 2009 |
மொழி | சி++ (Qt) |
இயக்கு முறைமை | Cross-platform |
தளம் | கே டீ ஈ |
மென்பொருள் வகைமை | கல்வி |
உரிமம் | குனூ பொதுமக்கள் உரிமம் |
இணையத்தளம் | edu.kde.org |
கால்சியம் (Kalzium) என்பது கட்டற்ற ஆவர்த்தன அட்டவணை மென்பொருள். இது தனிமங்களை பற்றிய விவரங்கள் அறிந்து கொள்ள உதவும் தொழில்நுட்பம். இதில் தனிமங்களைப் பற்றிய ஏராளமான தகவல்களும், அவைகளின் படங்களும் கிடைக்கும். ஆவர்த்தன அட்டைவணையில் தொகுதி ஆவர்த்தனம், பண்புகள், மாறுபட்ட குடும்பங்களின் பட அமைப்பு, தனிமங்களின் தனிப்பண்புகளை இணைத்து வரை படம் உருவாக்குதல் முதலியவைகளை எளிதாக செய்யலாம். மூலக்கூறு பொருண்மை, வெப்ப நிலை மாறும் பொழுது தனிமங்களின் இயற்பியல் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் முதலியவற்றை எளிதாகப் புரிந்துகொள்ள இம்மென்பொருள் உதவுகின்றது. மேலும் இக் கருவியை கொண்டு இடர் மற்றும் பாதுகாப்பு அறிக்கைகளை உருவாக்கமுடியும்.