கார்போனியம் அயனி
கார்போனியம் அயனி (Carbonium ion) என்பது இணைதிறன் ஐந்தாக உள்ள கார்பன் அணுவைக் கொண்டுள்ள எந்தவொரு நேர்மின் அயனியையும் குறிப்பிடுவதாகும் [1][2]. பொதுவாகக் கார்போனியம் அயனி என்ற பெயர் மெத்தேனியம் (CH+
5) வகைச் சேர்மங்களின் எளிய உறுப்பினரைக் குறிக்கப்பயன்படுகிறது. இங்கு இச்சேர்மத்தின் ஐந்து இணைதிறன்களும் ஐதரசன் அணுக்களால் நிரப்பப்பட்டுள்ளன [3].
மெத்தேனியத்திற்கு அடுத்த கார்போனியம் அயனியின் எளிய உறுப்பினருக்கு இரண்டு கார்பன் அணுக்கள் இருக்கின்றன. எத்தைனியம் அல்லது புரோட்டானேற்ற அசிட்டிலீன் (C
2H+
3) மற்றும் எத்தீனியம் (C
2H+
5) போன்ற அயனிகள் வழக்கமாக வேறு வகையான குடும்பங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. எத்தேனியம் அயனி (C
2H+
7) அகச்சிவப்பு நிறமாலையியல் ஆய்வுகளில் அடர்வு குறை வாயுவாக பார்க்கப்படுகிறது.[4]
தற்பொழுது கார்பீனியம் என்றழைக்கப்படும் அயனியையே முற்கால நூல்கள் கார்போனியம் அயனி என்று அழைத்தன, வேதியியலர் சியார்சு ஆண்ட்ரூ ஓலா 1972 [1] ஆம் ஆண்டில் தற்கால கார்போனியம் அயனிக்கான வரையறையை முன்மொழிந்தார். இவ்வரையறை பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. பெண்டா(டிரைபீனைல்பாசுபீன் தங்கம்(1)மெத்தேனியம் (Ph
3PAu)
5C+
, என்ற அணைவுச் சேர்மம் ஒரு நிலைப்புத்தன்மை கொண்ட கார்போனியம் அயனியாக உள்ளது. சிக்மித்பவுர் மற்றும் பிறர் இந்த அணைவுச் சேர்மத்தை உருவாக்கினர்
தயாரிப்பு[தொகு]
ஆல்க்கேன்களை மிக வலிமையான அமிலங்களுடன் சேர்த்து சூடாக்குவதன் மூலமாக கார்போனியம் அயனிகளைத் தயாரிக்க முடியும். தொழிற்சாலைகளில் பெட்ரோலியம் பிரித்தெடுத்தலின் போது முதனிலை வெப்பச் சிதைவில் இவை உருவாக்கப்படுகின்றன
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 George Andrew Olah (1972). "Stable carbocations. CXVIII. General concept and structure of carbocations based on differentiation of trivalent (classical) carbenium ions from three-center bound penta- of tetracoordinated (nonclassical) carbonium ions. Role of carbocations in electrophilic reactions". J. Am. Chem. Soc. 94 (3): 808–820. doi:10.1021/ja00758a020.
- ↑ தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "Carbonium ion". Compendium of Chemical Terminology Internet edition.
- ↑
Doo Wan Boo and Yuan T. Lee (1995), "Infrared spectroscopy of the molecular hydrogen solvated carbonium ions, CH+
5(H
2)n (n=1–6)". J. Chem. Phys. volume 103, page 520; எஆசு:10.1063/1.470138 - ↑ L. I. Yeh, J. M. Price, and Y. T. Lee (1989), "Infrared spectroscopy of the pentacoordinated carbonium ion C
2H+
7". Journal of the American Chemical Society, volume 111, pages 5591-5604. எஆசு:10.1021/ja00197a015