காரைக்கால் கடற்கரை
Appearance
காரைக்கால் கடற்கரை காரைக்கால் நகரின் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள கடற்கரை ஆகும். இக்கடற்கரை வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளது. காரைக்கால் கடற்கரை தென்கிழக்கு தமிழகப் பகுதிகளில் உள்ள சிறந்த இயற்கை கடற்கரைகளில் ஒன்றாகும்.[1] கடற்கரைக்கு அருகில் அரசலாற்றின் முகத்துவாரம் அமைந்துள்ளது. காரைக்கால் கடற்கரை இரண்டு கிலோமீட்டர் நீளம் கொண்டது.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக, நீரூற்றுக்கள், குழந்தைகள் பூங்காக்கள், உணவகங்கள் மற்றும் டென்னிஸ் அரங்கம் ஆகியவை இப்பகுதியில் கட்டப்பட்டுள்ளன.[2] இதன் காரணமாக காரைக்கால் கடற்கரை இப்போது ஒவ்வொரு நாளும் அதிகளவிலான மக்கள் கூட்டத்தை ஈர்க்கிறது.
சான்றுகள்
[தொகு]- ↑ http://traveltriangle.com/blog/best-beaches-in-pondicherry/
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-01-27. பார்க்கப்பட்ட நாள் 2018-02-09.