காம்பிசேரி கருணாகரன்
காம்பிசேரி கருணாகரன் | |
---|---|
பிறப்பு | பு. நா. கருணாகரன் 3 மார்ச்சு 1922 வள்ளிகுன்னம், திருவிதாங்கூர், இந்தியா |
இறப்பு | 27 சூலை 1977 | (அகவை 55)
பணி |
|
குறிப்பிடத்தக்க படைப்புகள் |
|
பட்டம் |
|
வாழ்க்கைத் துணை | பி. பிரேமவள்ளி |
பிள்ளைகள் |
|
புதன்வீட்டில் நாராயணன் கருணாகரன் ( Puthenveettil Narayanan Karunakaran ) (3 மார்ச் 1922-27 ஜூலை 1977) மலையாள மொழியில் எழுதிய இந்தியப் பத்திரிகையாளர் ஆவார். [1] இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரளப் பிரிவினர் வெளியிடும்[2]ஜனயுகம், பாலயுகம் (குழந்தைகளின் மாதாந்திர நூல்) மற்றும்ஜனயுகம் வாரிகா (திரைப்படம் பற்றிய வாராந்திர இதழ்) ஆகியவற்றின் தலைமை ஆசிரியராக இருந்தார். [3] பத்திரிகையாளராக இருப்பதைத் தவிராகவும், பேச்சாளராகவும், நடிகராகவும், [4] கேலியாளராகவும், நாத்திகராகவும் மற்றும் பகுத்தறிவுவாதியாகவும் அறியப்பட்டார்.
1952 முதல் 1954 வரை காயங்குளம் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் திரு-கொச்சி (திருவிதாங்கூர்-கொச்சி) சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்தார். பல முறை கேரள மாநில திரைப்பட விருதுகள் குழுவில் உறுப்பினராக இருந்தார்.
1950களின் முற்பகுதியில் கேரளா மக்கள் கலை மன்றத்தின் பிரபலமான மலையாள நாடகமான நிங்கலென்னெ கம்யூனிஸ்டாக்கி என்ற நாடகத்தில் “பரமு பிள்ளை” என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். உடல்நிலை சரியில்லாததால் மேடை நடிப்பை நிறுத்த வேண்டியிருந்தது. இருப்பினும், தான் இறக்கும் வரை கேரளா மக்கள் கலை மன்றத்துடன் தீவிரமாக தொடர்பு கொண்டிருந்தார். கேரளாவின் அனைத்திந்திய வானொலியின் பல நாடகங்களுக்கு குரல் கொடுத்தார்.
இறப்பு
[தொகு]1977 ஜூலை 27 அன்று திருவனந்தபுரத்தில் தனது 55 வயதில் காலமானார். வள்ளிக்குன்னத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு இவரது பெயர் சூட்டப்பட்டு காம்பிசேரி கருணாகரன் நினைவு அரசு தொழிற்கல்வி மேல்நிலைப்பள்ளி இது (கே. கே. எம். அரசு) என்று அழைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ John, K. C. (1975). The melting pot: Kerala, 1950's-1970's. Prasanthi Printers. p. 91. OCLC 3412806.
- ↑ "ஜனயுகம் நாளிதழ்" (in ஆங்கிலம்). டைம்ஸ் ஓப் இந்தியா. மே 30, 2007. Retrieved நவம்பர் 16, 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Devi, R. Leela (1977). History of Malayalam literature. Educational Supplies Depot. p. 172. OCLC 6625283.
- ↑ Bhasi, Thoppil (1979). Capital. Kerala Sahitya Akademi. p. 14. OCLC 8346184.