காமுகுல ஒக்கலிக கவுடர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
தமிழ் நாடு, கர்நாடகம் | |
மொழி(கள்) | |
தமிழ், கன்னடம் | |
சமயங்கள் | |
இந்து சமயம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
வொக்கலிகர் |
காமுகுல ஒக்கலிக கவுடர் (kamukula okkalika gowda) என்பவர்கள் தமிழ்நாட்டில் வாழும் ஒரு சாதியினராவர். இவர்கள் தமிழ்நாட்டின் தேனி, திண்டுக்கல், மதுரை, கோயமுத்தூர் ஆகிய மாவட்டங்களில் வாழ்கின்றனர்.
இவர்கள் கன்னடமும், தமிழும் கலந்த மொழியைப் பேசுகிறார்கள். சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் அயலார் படையெடுப்பின்போது துங்கபத்திரை ஆற்றின் கரையில் இருந்து தமிழ்நாட்டுக்கு இவர்கள் குடிபெயர்ந்தவர்கள் என செவிவழி செய்தி இவர்களிடம் நிலவுகிறது.[1] இவர்களிடையே படவனார், பசிலார், எம்மார், சௌந்தரார், ஆவுலார், கரவனார் என்று பல கூட்டங்கள் உள்ளன. மாமன் முறை உள்ள கூட்டதில் இருந்துதான் பெண் கொடுப்பது எடுப்பது என்ற வழக்கம் இவர்களிடம் உள்ளது.[2]
இவர்கள் தங்கள் திருமணங்களை மிக எளிமையாக நடத்தும் பழக்கம் கொண்டவர்கள். திருமணம் நடக்கும் இடத்துக்கு முதலில் மாப்பிள்ளை அழைக்கபடுகிறார். பின்னர் மணப்பெண் அழைக்கபடுகிறாள். பெண் மூன்று முறை மாப்பிள்ளையை வலம் வந்து காலில் விழுந்து வணங்கிவிட்டு, கூட்டதாரை பார்த்து வணங்கிவிட்டு அமருவாள். கூட்டதில் சாதிப் பெரியவர் 'இன்னார் பெண்ணுக்கும் இன்னார் பையனுக்கும் திருமணம் செய்விக்க இருவீட்டார் தாய்மாமன்கள் உட்பட சாதியாருக்கு சம்மதமா' என்று கேட்பார். கூட்டதார் சம்மதம் என்று சொல்ல 'அப்ப சரி மாலைய மாத்திகுங்க' என்று கூறுவார். பின்னர் மணமக்கள் மூன்றுமுறை மாலையை மாற்றிக் கொள்வார்கள் அதோடு திருமணம் முடிந்துவிடும். இவர்களிடம் திருமணத்தில் தாலி அணிவிக்கும் பழக்கமோ பிற சடங்குகளோ கிடையாது.[2] திண்டுக்கல், கோவை பகுதியில் உள்ளவர்கள் தாலிக்குபதில் கருகுமணி அணியம் பழக்கத்தைக் கொண்டுள்ளார்கள் என்றாலும் அதை அவர்கள் தாலியாக எடுத்துக் கொள்வதில்லை. இவர்கள் சாதியில் கைம்பெண் திருமணம் உண்டு. மண விலக்கும் உண்டு.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பவனி வரும் பட்டத்துக் காளை!அதிசய சம்பிரதாயங்களும்.. அபூர்வ பழக்கங்களும்.., தினத்தந்தி, பார்த்த நாள் 2021, பெப்ரவரி, 4
- ↑ 2.0 2.1 2.2 தாலி கட்டாத சாதி, கட்டுரை, இரா மணிகண்டன், பக்கம் 30- 34 குமுதம் (இதழ்) பொங்கல் சிறப்பிதழ் 13 சனவரி 2003,