காபுலில் இந்துக் கோவில்கள்
காபுல் நகரமானது மகா இந்து சாஹி மன்னர்களின் தலைநகரமாக இருந்தது. அக்காலகட்டத்தில் ஆப்கன் வேத கலாச்சாரத்தின் மையமாக விளங்கியது. அந்த காலகட்டத்தில் பல இந்துக்கோவில்களை ஆப்கானிஸ்தான் கொண்டிருந்தது. பல்வேறு கிளர்ச்சிக்கு மத்தியிலும் இன்னும் சில கோவில்கள் அங்கே இருக்கிறது..
காபுலில் உள்ள இந்துக்கோவில்களின் பட்டியல்
[தொகு]காபுலில் பல இந்துக்கோவில்கள் உள்ளன :
- ஆசமை இந்துக்கோவில். ஆப்கன் தலைநகருரிலுள்ள கோ -அய்-அசமை எனும் மலையின் அடிவார பகுதியில் அமைந்துள்ளது. மலையின் உச்சியில் ஆஷா எனும் பெண் கடவுள் ஆதிகாலம் தொட்டு இதுநாள் வரை இருப்பதாக நம்பப்படுகிறது. இந்தகடவுளின் பெயராலேயே இம்மலைக்கு ஆசமை என பெயரிடப்பட்டுள்ளது . இங்கு அணையா சுடர் பல நூற்றாண்டுகளாக எரிந்து வருகிறது. காபுலில் இந்தக்கோவிலும் அணையா விளக்கும் பல்வேறு முரண்களுக்கிடையேயும் இன்றும் நீடிப்பதோடு,ஆப்கனை ஆண்ட இந்து சாகி மன்னர்களை நினைவுகூறச்செய்கிறது. இக்கோவிலின் புகழையடுத்து நியூ யார்க், லண்டன், பரிதாபாத், ஃபிரான்க்பெஃர்ட், அம்ஸ்டர்டாம் ஆகிய இடங்களிலும் இக்கோவில் அமைந்துள்ளது.
- பாபா ஜோதி சொரூப் மந்திர் , தர்வாஜா லாகூரி
- பைரோ மந்திர் , சோர் பஜார்
- குரு ஹரி ராய் குருத்துவாரா ,சோர் பஜார்
- மங்கல்வார் மந்திர் , சோர் பஜார்
கந்தாரிலுள்ள இந்துக்கோவில்கள்
[தொகு]கந்தகாரில் , ஷிகார்புரி பஜார் , காபுலி பஜார் and ஜம்பீர் சஹீப் (சர்பூஜா அருகில் ) தேவி - துவாரா (தன் அருகில் ) ஆகிய இடங்களில் இந்துகோவில்கள் இருந்தன.
ஆப்கானிஸ்தானின் இதர நகரங்களில் இந்துகோவில்கள்
[தொகு]காஸ்மா சாஹிப் ,சுல்தான்பூர் , ஜலாலாலாபாத்,கஜினி ,ஹெல்மான்ட் (லஷ்கர்க்கா) ஆகிய இடங்களில் இந்துக்கோவில்கள் மற்றும் சீக்கிய வழிபாட்டு குருத்துவாராக்கள்அமைந்திருந்தன.
ஆப்கானிய இந்துக்கள்
[தொகு]ஆப்கனில் வாழும் இந்துக்கள் மொஹ்யல்ஸ்[1] காட்ரிஸ் மற்றும் ஆரோராஸ் , ஆகிய இனக்குழுக்களாக உள்ளனர். அது மட்டுமின்றி பாட்டியா மற்றும் பிராமின் ஆகியோரும் அங்கே வசிக்கின்றனர்.
இதையும் பார்க்க
[தொகு]- ஆப்கனில் இந்துமதம்
- ஆப்கனில் இசுலாமிற்கு முந்திய இந்து மதம் மற்றும் புத்த பண்பாடு
- உலகம் முழுவதும் உள்ள இந்துக்கோவில்களின் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hindu Castes and Sects, by Jogendra Nath Bhattacharya, Published by Editors Indian, Calcutta, 1968- page 470.