காந்தியடிகள் நற்பணிக் கழகம்
காந்தியடிகள் நற்பணிக் கழகம் | |
---|---|
அமைவிடம் | |
கும்பகோணம், தமிழ் நாடு | |
தகவல் | |
தொடக்கம் | 1975 |
நிறுவனர் | குருசாமி பாலசுப்பிரமணியன் |
பள்ளி மாவட்டம் | கும்பகோணம் |
மாணவர்கள் | 500 [1] |
காந்தியடிகள் நற்பணிக் கழகம், குருசாமி பாலசுப்பிரமணியன் என்பவரால் 1975-ம் ஆண்டு கும்பகோணத்தில் தொடங்கப்பட்டு, நடத்தப்பட்டுவரும் காலை மற்றும் மாலை வேலைகளில் இயங்கும் பள்ளிக்கூடம் ஆகும்.
ஆரம்ப காலம்
[தொகு]மளிகைக்கடை வைத்திருக்கும் குருசாமி பாலசுப்பிரமணியன், வேலைக்குச் செல்லும் மாணவர்களுக்கு காலை 6 முதல் 8 வரையிலும், மாலை 6 முதல் 9 வரையிலும் இலவசமாக பாடங்களைக் கற்றுத்தர ஏற்பாடு செய்துள்ளார். 1975-ம் ஆண்டு முதல் இப்பள்ளி இயங்கி வருகிறது. ஆரம்பத்தில் வாடகைக் கட்டடத்தில் இது இயங்கியது.
உதவிகள்
[தொகு]குருசாமி பாலசுப்ரமணியன் தனது 3 நண்பர்களுடன் இணைந்து, காந்தியடிகள் நற்பணி மன்றம் என்ற இலவச கல்வி மையத்தை உருவாக்கினார். பொதுமக்களின் நன்கொடை உதவியுடன் 12 வகுப்பறைகள் கட்டப்பட்டு, இங்கு கல்விச் சேவை வழங்கப்பட்டு வருகிறது.
ஆசிரியர்கள்
[தொகு]இங்கு பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை; இங்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும் ஊதியம் பெறுவதில்லை. இங்கு பணிபுரியும் ஆசிரியர்களில் பலர் ஏற்கெனவே இங்கு படித்து, அரசுப் பணி உள்ளிட்ட பணிகளில் சேர்ந்தவர்களாவர். அவர்கள் தங்களுடைய ஓய்வு நேரத்தில் இங்கு வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.
பிற வகுப்புகள்
[தொகு]காந்தியடிகள் நற்பணிகழகத்தில் இந்தி வகுப்புகளும், போட்டித் தேர்வுகளை எதிர் கொள்ள பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.
குறிப்புகளும் மேற்கோள்களும்
[தொகு]உசாத்துணை
[தொகு]- காந்தியடிகள் நற்பணிக் கழகம்! பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்
- மாற்றத்தின் வித்தகர்கள் 1 - கும்பகோணம் குருசாமி பாலசுப்பிரமணியன்
- 38 ஆண்டுகளாக இலவச கல்வி வழங்கும் காந்தியடிகள் நற்பணி கழகம்[தொடர்பிழந்த இணைப்பு]
- கண்ணைத் திறக்கும் கல்விக்கூடம்[தொடர்பிழந்த இணைப்பு]
- மளிகைக் கடைக்காரர் நடத்தும் பள்ளிக்கூடம்
- 38 ஆண்டுகளாக இலவச கல்வி வழங்கும் காந்தியடிகள் நற்பணி கழகம்
- பாலசுப்ரமணியன் போன்ற மனிதர்கள் அதிகரித்தால் அனைவருக்கும் இலவசக் கல்வி உண்டு என்பது நிச்சயம்.