காட் ஆஃப் வார்
காட் ஆஃப் வார்
| |
---|---|
God of War Logo.png | |
வகை | அதிரடி-சாகசம் ஹேக் மற்றும் ஸ்லாஷ்
|
காட் ஆஃப் (God of War ) ஒரு மூன்றாம் நபர் சாகச கானொளி விளையாட்டு ஆகும்.இந்த விளையாட்டினை சான்டா மோனிகா ஸ்டுடியோ நிறுவனம் மேம்படுத்தியது மற்றும் சோனி கம்ப்யூட்டர் என்டர்டைன்மென்ட் நிறுவனம் வெளியீட்டது.பிளேஸ்டேஷன் 2 (பிஎஸ் 2) முனையத்திற்காக மார்ச் 22, 2005 அன்று முதன்முதலில் வெளியிடப்பட்டது , இது அதே பெயரில் வெளியான தொடர்களின் முதல் பதிபு ஆகும். கிரேக்க புராணங்களில் உள்ள பழிதீர்க்கும் கதையினை அடிப்படையாகக் கொண்டது.ஒலிம்பியன் கடவுள்களுக்கு சேவை செய்யும் ஸ்பார்டன் வீரரான கதாநாயகன் க்ராடோஸை இந்த விளையாட்டினை விளையாடும் வீரர் கட்டுப்படுத்தும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. கிராடோசினைக் எராஸ் குழப்பமுறச் செய்து அவரின் மனைவிமற்றும் குழந்தைகளைக் கொலை செய்கிறது. அவரைப் பழி வாங்குவதற்காக பண்டோராவின் பெட்டி என்பதனைத் தேடிச் செல்கிறார். பண்டைய கிரேக்கத்தின் அழிவுக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு, க்ராடோஸ் பண்டைய நோர்வேயில் அட்ரியஸ் என்ற இளம் மகனுடன் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் இறந்த தனது தாய்க்கு கொடுத்த ஒரு வாக்குறுதியை நிறைவேற்ற பல பகுதிகள் முழுவதும் இரண்டு பயணங்கள் மேற்கொள்கிறான் அப்போது நார்ஸ் கடவுள்களின் ஆதரவாளர்களை எதிர்க்கிறான்.
இந்தத் தொடரின் விளையாட்டுக்கள் எல்லா காலத்திர்குமான சிறந்த அதிரடி விளையாட்டுகளாகப் பாராட்டப்பட்டுள்ளன. அவற்றில் சில புதிய பிளேஸ்டேஷன் தளங்களுக்கும் மறுவடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த உரிமையானது உலகளவில் 32 மில்லியனுக்கும் அதிகமான விளையாட்டுப் பிரதிகளை விற்றுள்ளது. தொடரின் விற்பனையும் அதற்கான ஆதரவும் மூன்று வரைகளை புத்தகத் தொடர்கள் மற்றும் மூன்று புதினங்கள் போன்ற பிற ஊடகங்களில் உரிமையாளரின் விரிவாக்கத்திற்கு வழிவகுத்தது.இந்த விளையாட்டினைத் தழுவிஎடுக்கப்படும் ஒரு திரைப்படத்திற்கான வேலைகள் 2005 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்ட்டன.
கானொளி விளையாட்டுகள்
[தொகு]வெளியீட்டு காலவரிசை | ||
---|---|---|
ஆண்டு | தேதி | தலைப்பு |
முதல் சகாப்தம் (கிரேக்க புராணம்) | ||
2005 | மார்ச் 22, 2005 | காட் ஆஃப் வார் |
2007 | மார்ச் 13, 2007 | காட் ஆஃப் வார் II |
ஜூன் 20, 2007 | காட் ஆஃப் வார்:பிட்ரயல் | |
2008 | மார்ச் 4, 2008 | காட் ஆஃப் வார்: செயின்ஸ் ஆஃப் ஒலிம்பஸ் |
2010 | மார்ச் 16, 2010 | காட் ஆஃப் வார் III |
நவம்பர் 2, 2010 | காட் ஆஃப் வார்: கோஸ்ட் ஆஃப் ஸ்பார்டா | |
2013 | மார்ச் 12, 2013 | காட் ஆஃப் வார்: அசென்ஷன் |
இரண்டாம் சகாப்தம் (நார்ஸ் புராணம்) | ||
2018 | ஏப்ரல் 20, 2018 | காட் ஆஃப் வார் |
முதல் சகாப்தம் (கிரேக்க புராணம்)
[தொகு]காட் ஆஃப் வார் முதன்முதலில் பிளேஸ்டேஷன் 2 க்காக மார்ச் 22, 2005 அன்று வட அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. பத்தாண்டுகள் ஒலிம்பிக் தெய்வங்களுக்கு ஸ்பார்டன்சேவை செய்து வருகிறார்.அதீனாஎனும் பெண் தெய்வம் பண்டோராபெட்டியினைக் கண்டறியும் பணியின கிராடோசுக்கு வழங்குகிறது. அதனை வைத்து தான் ஏரஸ் என்பவரை வீழ்த்த முடியும் எனக் கூறுகிறது. ஆனால் ஏரஸ் ஒரு சமயம் இவரைக் காப்பாற்றுகிறது. இருந்தபோதிலும் கிராடோசினைக் எராஸ் குழப்பமுறச் செய்து அவரின் மனைவிமற்றும் குழந்தைகளைக் கொலை செய்கிறது. அவரைப் பழி வாங்குவதற்காக பண்டோராவின் பெட்டி என்பதனைத் தேடிச் செல்கிறார்.
காட் ஆஃப் வார் II முதன்முதலில் பிளேஸ்டேஷன் 2 க்காக மார்ச் 13, 2007 அன்று வட அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. தனது சக கடவுளர்களிடம் கோபமடைந்த க்ராடோஸ் ரோட்ஸ் நகரம் முழுவதும் பரபரப்பாக ஓடுகிறார். டைட்டன் கியாவால் காப்பாற்றப்பட்ட க்ராடோஸை ஜீயஸ் தலையிட்டு காட்டிக்கொடுக்கிறார். அவர் இப்போது அவர் சகோதரிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறுகிறார், அவர் தனது விதியை மாற்றி ஜீயசால் அவரது மரணத்தைத் தடுக்க முடியும். க்ராடோஸ் இறுதியில் வெற்றிகரமாக அவரது பணிகளைச் செய்து முடிக்கிறார், அவர் கடவுளைக் கொல்லப் போகிறபோது, ஜீயஸைக் காப்பாற்றவும் ஒலிம்பஸைப் பாதுகாக்கவும் அதீனா தன்னைத் தியாகம் செய்கிறாள், மேலும் அவர் க்ராடோஸிடம் சீயஸ் தான் அவரின் தந்தை எனக் கூறுகிறார். . கிராடோஸ் பின்னர் கியா மற்றும் டைட்டன்ஸுடன் சேர்ந்து ஒலிம்பஸைத் தாக்குகிறார்.[1]
சான்றுகள்
[தொகு]- ↑ "God of War II – PlayStation 2". IGN. Ziff Davis Media. Archived from the original on July 1, 2013. பார்க்கப்பட்ட நாள் July 5, 2012.
- ↑ "God of War – PlayStation 2". IGN. Ziff Davis Media. Archived from the original on May 19, 2012. பார்க்கப்பட்ட நாள் July 5, 2012.