காட்ஃபிரே எவான்ஸ்
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | காட்ஃபிரே எவான்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 5 அடி 9 அங் (1.75 m) | |||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | துடுப்பாட்டம், குச்சக்காப்பாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 315) | ஆகத்து 17 1946 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | சூன் 20 1959 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், மே 3 1999 |
காட்ஃபிரே எவான்ஸ் (Godfrey Evans, பிறப்பு: ஆகத்து 18 1920, இறப்பு: மே 3 1999) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 91 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 2439 ஓட்டங்களை எடுத்தார். இதில் அதிகபட்சமாக 106 ஓட்டங்களை எடுத்தார். இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஒரு நிறைவுகள் கூட வீசவில்லை. 465 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டு 14,822 ஓட்டங்களை எடுத்துள்ள இவரின் மட்டையாட்ட சராசரி 21.22 ஆகும். இதில் அதிகபட்சமாக 287 ஓட்டங்களை எடுத்துள்ளார் இ.ரு இழப்புகளை மட்டும் எடுத்துள்ளார். மேலும் 7 நூறுகளும் 62 அரை நூறுகளும் எடுத்துள்ளார். இவர் 1946 - 1959 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]ஒரு இளைஞனாக காட்ஃப்ரே எவன்ஸ் ஒரு சிறந்த பன்முக விளையாட்டு வீரராக இருந்தார். கேன்டர்பரி, கென்ட் கல்லூரியில் துடுப்பாட்டம் , கால்பந்து மற்றும் வளைதடிப் பந்தாட்டம் ஆகிய அணிகளுக்குத் தலைமை தாங்கினார். அவர் ஒரு நல்ல குத்துச்சண்டை வீரராகவும் இருந்தார். கென்ட் 71 நிமிடங்களில் 219 ஓட்டங்கள் எடுத்து க்ளூசெஸ்டர்ஷர் துடுப்பாட்ட அணியினை வீழ்த்தினார். [1]
அவர் ஜூலை 22, 1939 இல் பிளாக்ஹீத்தில் சர்ரே துடுப்பாட்ட அணிக்கு எதிராக அறிமுகமானார். ஆட்டம் சமனில் முடிந்தது. அவர் முதல் ஆட்டப் பகுதியில் 8 ஓட்டங்கள் எடுத்தார். 2 ஆம் உலகப் போரின் போது, அவர் ராயல் ஆர்மி சர்வீஸ் கார்ப்ஸில் இருந்தார்.
தேர்வுத் துடுப்பாட்டம்
[தொகு]1946 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக ஓவல் துடுப்ப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[2]
1946/47 இல் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்தது. வாலி ஹமொண்ட் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணியின் தலைவராக இருந்தார்.இதில் கிப் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியதனால் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர் மெல்போர்னில் நடந்த இரண்டாவது போட்டியில் எவன்ஸ் தனது வாய்ப்பைப் பெற்றார். ஆஸ்திரேலியா தனது முதல் ஆட்டப் பகுதியில் 659 ஓட்டங்களை 8 இழப்புகளில் எடுத்தது. இந்தப் போட்டியில் ஆட்திரேலியத் துடுப்பாட்ட அணி ஒரு ஆட்டப் பகுதி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி 173 நிறைவுகள் வீசியது. இதில் எவன்ஸ் உதிரி ஓட்டங்களில் ஒரு ஓட்டங்களைக் கூட கொடுக்கவில்லை. பின்னர் நடந்த மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் ஒரு உதிரி ஓட்டத்தினை விட்டுக் கொடுத்தார். அதற்கு முன்பாக இவர் பந்துவீச்சில் 1000 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார்.[3] பின்னர், நான்காவது போட்டியின் மட்டையாட்டத்தில் ஒரு ஓட்டம் எடுப்பதற்கு இவர் 97 நிமிடங்கள் எடுத்துக் கொண்டார். இது ஒரு சாதனையாக அமைந்தது. பின்னர் இந்தச் சாதனையானது 1999 ஆம் ஆண்டில் ஜெஃப் அலோட்டால் முறியடிக்கப்பட்ட்டது. [4]
ஆஷஸ் தொடரைத் தொடர்ந்து நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி கொண்ட அந்தத் தொடர் மழையால் பாதிக்கப்பட்டது. ஆனால் ஓடாகோ எவன்ஸ் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மேரிலேபோன் துடுப்பாட்ட சஙக் (எம்.சி.சி) சுற்றுப்பயண போட்டியில் முதல் தரத் துடுப்பாட்ட்டப் போட்டியின் முதல் நூறு ஓட்டங்களை எடுத்தார்.
சான்றுகள்
[தொகு]- ↑ Foot, David (4 May 1999). "Godfrey Evans (obituary)". The Guardian. https://www.theguardian.com/news/1999/may/04/guardianobituaries2. பார்த்த நாள்: 26 April 2015.
- ↑ "England v India, 1946, Third Test, Scorecard". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2008-12-03.
- ↑ "Australia v England, 1946/47, Third Test, Scorecard". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2009-02-21.
- ↑ "Allott sets new marks". Cricinfo. 3 March 1999. பார்க்கப்பட்ட நாள் 2008-12-03.