காடாம்புழா தேவி கோயில்
10°56′33″N 76°02′40″E / 10.94246°N 76.04453°E
காடாம்புழா தேவி கோயில் (Kadampuzha Devi Temple) என்பதுஇந்தியாவின், கேரளத்தின், மலப்புரம் மாவட்டத்தின், காடாம்புழாவில் உள்ள ஒரு இந்துக் கோவில் மற்றும் புனித யாத்திரை தலமாகும். கோழிக்கோட்டையும், திருச்சூரையும் இணைக்கும் நெடுஞ்சாலையில் வெட்டிச்சிரா என்ற இடத்திற்கு 3 கி.மீ. வடக்காக இக்கோயில் உள்ளது. இந்த கோயிலின் முக்கிய தெய்வமான பார்வதி / துர்க்கை ஆவாள். இந்த கோவிலில் தேவியின் சிலை இல்லை, இறைவி ஒரு குழியில் வணங்கப்படுகிறாள். பக்தர்கள் அம்மனுக்கு கொப்பரைத் தேங்காயை காணிக்கை செய்கிறார்கள். விநாயகர் பிரசன்னம் தேவியுடன் இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும் சாஸ்தா மற்றும் நாக தெய்வங்களுக்கான சிற்றாலயங்கள் உள்ளன. கோயிலுக்கு அருகில் 'மாதம்பியர்காவு' என்று ஒரு தனி சிவன் கோயில் உள்ளது. இந்த இரண்டு கோயில்களும் மலபார் தேவசம் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.