உள்ளடக்கத்துக்குச் செல்

காஞ்சிரமட்டம் மகாதேவர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காஞ்சிரமட்டம் மகாதேவர் கோயில், இந்தியாவில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் தொடுபுழா வட்டம் காஞ்சிரமட்டம் கராவில் தொடுபுழா ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு பழமையான இந்துக் கோயிலாகும். [1] தொடுபுழா KSRTC பேருந்து நிலையத்திலிருந்து தென்கிழக்கே ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. இது கேரளாவின் 108 சிவன் கோயில்களில் ஒன்றாகும். இது சிவபெருமானுக்காக பரசுராம முனிவரால் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது.

துணைத்தெய்வங்கள்[தொகு]

மூலவர் சிவன், பார்வதியுடன் கல்ப விருட்சத்தின் கீழ் தியானம் செய்யும் கோலத்தில் உள்ளார். இக்கோயில் கேரள கட்டிடக்கலைப்பாணியில் கட்டப்பட்டுள்ளது. துர்க்கை, அமிர்தகலச சாஸ்தா, கணபதி, வனதுர்க்கை, நாக தெய்வங்கள், மூகாம்பிகா தேவி, ராட்சஸ் ஆகிய துணைத்தெய்வங்கள் இக்கோயிலில் உள்ளன.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]