காசிகுண்ட்
காசிகுண்ட் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: நகரத்தின் அமைவிடம் 33°35′32″N 75°09′56″E / 33.592132°N 75.165432°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ஜம்மு காஷ்மீர் |
மாவட்டம் | அனந்தநாக் |
ஏற்றம் | 1,670 m (5,480 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 9,871 |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | காஷ்மீரி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | JK03 |
காசிகுண்ட் (Qazigund), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்தில் அமைந்த சிறு நகரம் ஆகும். காசிகுண்ட் நகரம் கடல்மட்டத்திலிருந்து 1670 மீட்டர் (5478 அடி) உயரத்தில் இமயமலையின் பீர்பாஞ்சால் மலைத்தொடரில் 33°35′N 75°10′E / 33.59°N 75.16°E பாகையில் அமைந்துள்ளது.
அமைவிடம்
[தொகு]ஜம்மு - காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை எண் 44 மீது அமைந்துள்ள காசிகுண்ட் நகரம், அனந்தநாக்கிலிருந்து 21 கிமீ தொலைவிலும்; ஸ்ரீநகரிலிருந்து 72 கிமீ தொலைவிலும்; ஜம்முவிலிருந்து 187 கிமீ தொலைவிலும் உள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 5 வார்டுகள் கொண்ட காசிகுண்ட் நகராட்சியின் மக்கள்தொகை 9,871 ஆகும். மக்கள்தொகையில் இசுலாமியர் 90.33%; இந்துக்கள் 9,871%; சீக்கியர்கள் 1.49% மற்றவர்கள் 0.39% ஆகவுள்ளனர். [1]
போக்குவரத்து வசதிகள்
[தொகு]
காசிகுண்ட் நகரம், பிர் பாஞ்சல் மலைத்தொடர் வழியாகச் செல்லும் அனந்தநாக் மற்றும் ஸ்ரீநகர், பட்காம், பாரமுல்லா, பனிஹால் போன்ற நகரங்களை தேசிய நெடுஞ்சாலை 44 (இந்தியா) மற்றும் இருப்புப் பாதை வழியாக இணைக்கிறது. [2] பிர் பாஞ்சல் மலைத்தொடர் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 44, காசிகுண்ட் நகரம், பீர் பாஞ்சால் சுரங்க இருப்புப்பாதை மற்றும் ஜவகர் குகை வழியாக ஜம்மு நகரத்துடன் இணைக்கப்படுகிறது.[3]
இதனையும் காண்க
[தொகு]- பீர் பாஞ்சால் சுரங்க இருப்புப்பாதை
- ஜவகர் குகை
- பனிஹால்-காசிகுண்ட் சுரங்கச்சாலை
- செனானி-நஷ்ரி சுரங்கச்சாலை