உள்ளடக்கத்துக்குச் செல்

காகா இராதாகிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(காகா ராதாகிருஷ்ணன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
காக்கா இராதாகிருஷ்ணன்
பிறப்புஇராதாகிருஷ்ணன்
சங்கிலியாண்டபுரம், திருச்சி, தமிழ்நாடு[1]
பணிநடிகர்
பெற்றோர்தந்தை : வெள்ளையன்
தாயார் : சுப்புலட்சுமி
வாழ்க்கைத்
துணை
விசாலாட்சி

காக்கா இராதாகிருஷ்ணன் அல்லது காகா ராதாகிருஷ்ணன் (இறப்பு: சூன் 14, 2012) தமிழ்த் திரைப்பட உலகின் ஒரு பழம்பெரும் நடிகர். 1940களில் இருந்து திரைப்படங்கள் மற்றும் மேடை நாடக நடிகராகத் திகழ்ந்தவர். சிவாஜி கணேசனை மேடை நாடகத்துறைக்கு அறிமுகம் செய்து வைத்தவர்[2][3]. 1949ஆம் ஆண்டு மங்கையர்க்கரசி என்ற திரைப்படத்தில் அறிமுகமான இராதாகிருஷ்ணன் 600க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சொந்த வாழ்க்கை

[தொகு]
  • "காகா" ராதாகிருஷ்ணன் அவர்கள் திருச்சி, சங்கிலியாண்டபுரத்தில் வெள்ளையன் ஆசாரியார் - சுப்புலட்சுமி அம்மாள் இணையாருக்கு 2வது மகனாக பிறந்தார், இவர் தந்தை வெள்ளையன் பொன்மலை இரயில்வே பணிமனையில் வேலை செய்து வந்தார் இராதாகிருஷ்ணனுக்கு இரண்டு வயதிலே அவர் தந்தை உடல் நல குறைவால் இறந்துவிட அவரது குடும்பம் வறுமைக்கு தள்ளபட்டது அவர் அன்னை சுப்புலட்சுமி அவர்கள் மிகவும் கடினபட்டு ராதாகிருஷ்ணனையும் அவரது அண்ணன் மாணிக்கவிநாயகமூர்த்தியையும் வளர்த்துவந்தார்.
  • பின்பு அவரது அண்ணன் மாணிக்கவிநாயகமூர்த்திக்கு தந்தையின் வேலை இரயில்வே இலாக்கவில் இருந்து எஞ்சின் ஓட்டுனர் வேலையில் சேர்ந்து சம்பாரிக்க தொடங்கிய பொது ராதாகிருஷ்ணனை படிக்க வைக்க தொடங்கிய போதும் அவருக்கு படிப்பில் ஆர்வம் இல்லாமல் தெரு கூத்து நாடகத்தில் கலை ஆர்வம் பிறக்க நாடக குழுவுடன் சேர்ந்து அவரது நடிப்பு பயணத்தை தொடங்கினார்.

திரை வாழ்க்கை

[தொகு]

ஆறு அகவையில் நவாப் ராஜமாணிக்கம் நாடகக் குழுவில் சேர்ந்த ராதா கிருஷ்ணன், பிறகு என்.எஸ்.கிருஷ்ணன் நாடக குழுவில் சேர்ந்தார்[4]. இராதாகிருஷ்ணன் தன்னுடைய முதல் திரைப்படமான மங்கையர்க்கரசியில், வேலையில் சேர்வதற்காகக் காக்காப் பிடிக்க வேண்டி அவருடைய தாயார் கூறியதும், உண்மையான காகத்தைப் பிடித்துக் கொண்டு போய் வேலை கேட்பார். அக்காலத்தில் அந்நகைச்சுவைக் காட்சி மிகவும் பிரபலம். அதன் காரணமாகவே, இவர் காகா இராதாகிருஷ்ணன் என்று அழைக்கப்பட்டார்.[5][6].

அறுபது வயதுக்குப் பிறகும் திரைப்படங்களில் நடித்த இவரது அண்மையத் திரைப்படங்களான வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், உன்னைத்தேடி, காதலுக்கு மரியாதை, மாயி ஆகியவற்றில் நகைச்சுவைக் காட்சிகளில் நடித்து மக்களை கவர்ந்தவர். இவரது பிற குறிப்பிடத்தக்கப் படங்களாக நல்லதம்பி, வண்ணசுந்தரி,‌ சந்திர கிரி, மங்கையர்க்கரசி, உத்தமபுத்திரன், மனோகரா, தாய் மகளுக்கு கட்டியதாலி, தாய்க்குப்பின் தாரம், வந்தாளே மகராசி ஆகியன உள்ளன.

மறைவு

[தொகு]

மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இராதாகிருஷ்ணன், சூன் 14, 2012 மாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்[7]. இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். 2 மகன்கள், 4 மகள்கள் இருக்கிறார்கள். இராதாகிருஷ்ணன் சென்னை தி.நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது சொந்த ஊர் திண்டுக்கல், ஆனால் வளர்ந்தது திருச்சி அருகே உள்ள சங்கிலியாண்டபுரம். பிறகு சென்னைக்குக் குடி பெயர்ந்தார்.

குறிப்பிடத்தக்கத் திரைப்படங்கள்

[தொகு]
வருடம் திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
1949 நல்லதம்பி
1951 வனசுந்தரி
1954 மனோகரா வசந்தன்
1959 மின்னல் வீரன்
1991 குணா
1992 தேவர் மகன்
1997 இருவர்
காதலுக்கு மரியாதை
1998 உதவிக்கு வரலாமா
1999 உனக்காக எல்லாம் உனக்காக
உன்னைத்தேடி
ஹலோ
ரோஜாவனம்
2001 விண்ணுக்கும் மண்ணுக்கும்
மனதை திருடிவிட்டாய்
2004 மானஸ்தன்
வசூல் ராஜா MBBS
2006 இதய திருடன்
2010 என் உயிரும் மேலான

மேற்கோள்களும் குறிப்புக்களும்

[தொகு]
  1. கருத்துக்கள உறவுகள் (15 சூன் 2012). "மூத்த நடிகர் காகா ராதாகிருஷ்ணன் மரணம்!". யார்ல். Retrieved 15 சூன் 2012.
  2. Into realms of the past பரணிடப்பட்டது 2012-04-17 at the வந்தவழி இயந்திரம், மாலதி ரங்கராஜன், த இந்து, சூன் 19, 2007
  3. Contented with her lot பரணிடப்பட்டது 2007-02-04 at the வந்தவழி இயந்திரம், மாலதி ரங்கராஜன், த இந்து, சனவரி 26, 2007
  4. "காகா ராதாகிருஷ்ணரை மறந்து போன தமிழ் சினிமா… !". 15 சூன் 2012. அலைகள் ஈ-நியூஸ். Retrieved 15 சூன் 2012.
  5. "காகா ராதாகிருஷ்ணன் என பெயர் வந்தது எப்படி?". Retrieved 15 சூன் 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "காகா ராதாகிருஷ்ணன் என பெயர் வந்தது எப்படி?". ஒன் இந்தியா வலைத்தளம். 15 சூன் 2012. Retrieved 15 சூன் 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-11-04. Retrieved 2012-06-15.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காகா_இராதாகிருஷ்ணன்&oldid=3861802" இலிருந்து மீள்விக்கப்பட்டது