உள்ளடக்கத்துக்குச் செல்

கஹூட்!

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கஹூட்!
வலைதளத்தின் தோற்றம்
கிடைக்கும் மொழி(கள்)ஆங்கிலம், இடச்சு மொழி, பிரான்சிய மொழி, இடாய்ச்சு மொழி, இந்தோனேசிய மொழி, இத்தாலிய மொழி, சப்பானிய மொழி, மலாய் மொழி, நோர்வே மொழி, போலிய மொழி, போர்த்துக்கேய மொழி, எசுப்பானியம், சுவீடிய மொழி, துருக்கிய மொழி, உக்குரேனிய மொழி, அரபு மொழி, சீன மொழி
நாடுநோர்வே
உரிமையாளர்Kahoot!
வணிக நோக்கம்Yes
பதிவு செய்தல்வினாடி வினாவினை உருவாக்க பதிவு செய்தல் அவசியம், ஆனால் பங்கேற்க பதிவு செய்யத் தேவையில்லை.
பயனர்கள்50 million monthly active users (as of May 2017) [1]
வெளியீடுMarch 2013
உரலிMain website: kahoot.com
Game: kahoot.it


கஹூட்! (Kahoot!) விளையாட்டு அடிப்படையிலான கற்றல் தளமாகும், [2] பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் கல்வி தொழில்நுட்பமாக பயன்படுத்தப்படுகிறது."கஹூட்ஸ்", பயனர் உருவாக்கிய பலதேர்வு வினாடி வினாக்களை இணைய உலாவி அல்லது கஹூட் வழியாகப் பயனர்கள் பயன்படுத்த இயலும். இது வளரறி மதிப்பீட்டிற்காக மாணவர்களின் அறிவுத்திறன்களை அறிவதர்காகவோ அல்லது வழக்கமான கற்றல் செயல்பாடுகளில் இருந்து விலகி மாணவர்களுக்கு புதிய அனுபவம் கிடைப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.[3] பொது அறிவு வினாக்களுக்கும் இது பயன்படுத்தப்படுகிறது.[4] இந்தத் தளமானது ஊபிளாஷ், சாக்ரடிவ், குவிஸ்லெட் போன்ற பிற தொழில்நுட்பக் கற்றல் கருவிகளைப் போலவே உள்ளது.

வரலாறு மற்றும் வளர்ச்சி

[தொகு]

கஹூட்! 2012 இல் ஜோஹன் பிராண்ட், ஜேமி ப்ரூக்கர் மற்றும் மோர்டன் வெர்ஸ்விக் ஆகியோரால் நோர்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கூட்டுத் திட்டத்தில் நிறுவப்பட்டது. பேராசிரியர் ஆல்ஃப் இங்கே வாங் உடன் இணைந்து இதனை நிறுவினர், பின்னர் நோர்வே தொழிலதிபர் ஆஸ்மண்ட் ஃபுருசெத் அவர்களுடன் இணைந்தார். [5] கஹூட்! மார்ச் 2013 இல் SXSWedu இல் [5] அறிவிக்கப்பட்டது.பொதுமக்களுக்கான இதன் சோதனைப் பதிப்பு செப்டம்பர் 2013 இல் வெளியிடப்பட்டது.

விளையாட்டின் முடிவில், மேடைப் பீடத்தில் முதல் மூன்று மதிப்பெண் எடுத்தவர்கள் இயங்குபடம் மூலமாக சிறப்பிக்கப்படுவார்கள்.பங்கேற்பாளர்கள் தங்கள் அனுபவத்தின் அடிப்படையில் கஹூட்டை மதிப்பிடலாம்.

2021 இல், கஹூட்! உலகளவில் Clever Inc. இன் வரம்பை விரிவுபடுத்த ஒற்றைப் புகுபதிகை நவீன கற்றல் தளமான கிளவர் இங்க்-ஐ $500 மில்லியனுக்கு வாங்குவதாக அறிவித்தது. [6]

சான்றுகள்

[தொகு]
  1. https://tech.eu/2017/03/06/kahoot-1-billion-players
  2. "What is kahoot? Answered". Kahoot.com.
  3. "Kahoot! as Formative Assessment - Center for Instructional Technology" (in en-US). Center for Instructional Technology. 2015-07-02 இம் மூலத்தில் இருந்து 2017-02-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170201123005/https://cit.duke.edu/blog/2015/07/kahoot-as-formative-assessment/. 
  4. "Kahoot Trivia". Allen County Public Library. Archived from the original on 2017-08-10.
  5. 5.0 5.1 "About Kahoot! | Company History & Key Facts". Kahoot! (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2018-11-03. பார்க்கப்பட்ட நாள் 2018-11-01.
  6. "Ed Tech Company Kahoot! Acquires Clever for $500M". Government Technology. 14 May 2021. பார்க்கப்பட்ட நாள் 21 May 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கஹூட்!&oldid=3457038" இலிருந்து மீள்விக்கப்பட்டது